கோவிட் இரண்டாம் அலைக்கு பிறகு இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சற்றே அதிகமாக வளர்ச்சி கண்டது. இந்நிலையில் பல நிறுவனங்கள் மல்டிபேக்கர் ஆக மாறியுள்ளது கண்கூடு. இந்த மல்டிபேக்கர் லிஸ்டில் இடம்பெற்ற சில நிறுவனங்களில் ஒன்றான ஸ்பின்டெக்ஸ் நிறுவனம் தான் இந்த இரட்டிப்பு லாபத்தை காட்டியுள்ளது.

இரண்டு மாதங்களில் பங்கு சந்தையில் விலை அதிகரித்த லக்னம் ஸ்பின்டெக்ஸ்

தேசிய பங்குச்சந்தையில் கடந்த ஆண்டு இறுதி நவம்பர் 30ல் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெறும் ரூபாய் 47.20ஆக மட்டுமே இருந்தது. அதுவே இரண்டே மாதங்களில் அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா இரண்டு மடங்கு வளர்ச்சி பெற்று தற்போது 94.25 ரூபாயாக உள்ளது என்றால் ஆச்சர்யம் தான். இதுவே இன்னும் ஒரு மாதத்தில் மேலும் விலை உயர்ந்து 115 ரூபாய் வரை செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களும், பங்குச்சந்தை வல்லுனர்களும் லக்னம் ஸ்பின்டெக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு ஆதரவளிக்கின்றனர். காரணம், அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட தரவுகள் அனைத்தும் சாதகமாக சூழலில் அமைந்துள்ளது. முதலீட்டாளர்களை பொறுத்த வரையில் எந்த நிறுவனத்தில் செய்யப்படும் முதலீட்டையும் பல விஷயங்களையும் அறிந்து, ஆராய்ந்தே செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உயர்தர பருத்தி நூல் உற்பத்தியில் முன்னணி நிலை

லக்னம் ஸ்பின்டெக்ஸ் டெக்ஸ்டைல் துறையில் என்ன உற்பத்தி செய்கிறது? உயர்தரப் பருத்தி நூல் உற்பத்தியில் இந்தியாவில் முன்னணியில் இருக்கிறது லக்னம். இது தன் உற்பத்தியை மேலும் விரிவாக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு நிதியாண்டுகளில் இந்த விரிவாக்கத்தை முடித்து 2024 ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று உத்தேசிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் உற்பத்தி மதிப்பு நாள் ஒன்றுக்கு 35 டன் பருத்தி நூல். விரிவாக்க முயற்சிக்கு பின் அதுவே இரு மடங்காக அதிகரித்து 70 டன்னாக உயர உள்ளது. விற்பனை அதிகரிக்கும், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும், வருமானம் கூடுதலாகும் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்றுமதி விற்பனை செய்ய முடியும்.

2021 டிசம்பர் காலாண்டு லாபம் எவ்வளவு?

லக்னம் ஸ்பின்டெக்ஸின் மொத்த லாபம் 2021 டிசம்பர் காலாண்டில் 107 சதவீதம் அதிகரித்து 9.4 கோடி ரூபாயாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டில் லாப மதிப்பு ரூபாய் 4.54 கோடி மட்டுமே.