டி.வி.களின் விலை அக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி உதிரிபாகத்துக்கான இறக்குமதி வரிவிலக்கு சலுகை நிறுத்தப்பட்டுள்ளதால் டி.வி.களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

டி.வி:

நம் நாட்டில் டி.வி,கள் இல்லாத வீடு என்பது இல்லை என்று கூற வேண்டும். ஏனென்றால், அனைத்து வீடுகளிலும் நிச்சயமாக டி.வி.கள் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப சாதாரண கருப்பு வெள்ளை டி.வி.கள் முதல் விலை உயர்ந்த ஸ்மார்ட் டிவி வரை வைத்திருப்பார்கள். அதற்கேற்ப, பல்வேறு விலையில் சந்தையில் டிவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டி.வி.கள் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டாலும், அதற்கான உதிரிப்பாகங்கள் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் உதிரிப்பாகங்களின் விலை மற்றும் இறக்குமதி வரியைப் பொறுத்தும் டி.வி.களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இவற்றில் பேனல் தான் தொலைக்காட்சி வடிவமைப்பிற்கு முக்கிய உதிரிபாகமாக கருதப்படுகிறது. அத்தகைய உதிரிபாகத்துக்கு ஆண்டுக்கு 5% வரை இறக்குமதி வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

பேனல் களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கவுள்ளது. ஏனென்றால், இந்த நடைமுறையானது இம்மாதத்துடன் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பேனலின் விலை 2,600 ரூபாயில் இருந்து 4,600 ஆக உயர்ந்துள்ளது. இது விலை உயர்வு 32 இன்ச் டி.வி.க்கான பேனலின் விலை ஆகும்.

Author – Gurusanjeev Sivakumar