பிரபல பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபமானது 23 சதவீதம் அதிகரித்து, ரூ.495 கோடி ஆக அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் லாபமானது ரூ.403 கோடி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டானியா நிறுவனம்:

இதன் ஒருங்கிணைந்த விற்பனையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 11% ஏற்றம் அடைந்து, ரூ.3354 கோடி ஆக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.3023 கோடி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகரலாபம் ரூ.462 கோடியும், இதன் விற்பனையானது ரூ.3161 கோடி ஆகவும் உள்ளது.

பிரிட்டானியா நிறுவனத்தின்ன் அனைத்து வணிகங்களும் சாதகமாக ஆரோக்கியம் வாய்ந்த, லாபகரமான வளர்ச்சியை அளித்துள்ளன என்று பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வருண் என்பவர் கூறியுள்ளார்.

கோவிட்-19 தொற்றின் தாக்கம் பொருளாதார ரீதியான வளர்ச்சிகள் மற்றும் நுகர்வோரின் நடத்தைகள் ஆகியவற்றில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட ஊராடங்கில் பல தளர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த நிலைமையானது இயல்பு நிலைக்கு மாற மேலும் சில காலம் ஆகும் என்று தான் தோன்றுகிறது.

பிரிட்டானியா நிறுவனத்தின் மூலப்பொருட்களின் விலையில் சற்று மிதமான பணவீக்கத்தினையும் காண முடிந்தது. இருப்பினும், பருவமழை மற்றும் அறுவடை தொடர்பான நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டு, விஇதன் லைகள் வருகின்ற காலகட்டத்தில் ஒரு நிலையாக இருக்கும் என் இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இந்நிறுவனம் மேக்ரோ பொருளாதாரம் தொடர்பான காரணிகளை மிகவும் நுணுக்கமாய் கவனித்துக் கொண்டு வருகிறது. இவை நுகர்வோர்களின் திறனை மேம்படுத்த மற்றும் மாறுகின்ற நிலைமைக்கு சாதகமாக நடுத்தர காலத்தின் மூலோபாயத்தை வடிவமைத்து வருவதாகவும் பிரிட்டானியா நிறுவனம் கூறியுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar