தனியார் துறை சேர்ந்த AXIS பேங்க் லிமிடெட் கடந்த செப்டம்பரில் முடிந்த 2-வது காலாண்டில் இதன் நிகரலாபமானது, 1683 கோடி ரூபாய் ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே செப்டம்பரில் இதன் நஷ்டமாக 112 கோடி ரூபாய் இருந்த நிலையில், இவ்வாண்டில் சிறந்த லாபத்தை கண்டுள்ளது.

அதே போல் இந்த வங்கியின் செயல்பாட்டு லாபமானது 2-வது காலாண்டில், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 16% அதிகரித்து இருந்தது, ஆனால், கடந்த காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 18% அதிகரித்து 6898 கோடி ரூபாய் ஆக உள்ளது.

அதேபோல், வங்கியின் நிகரவட்டி வருமானமானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 20% அதிகரித்து, ரூ.7326 கோடி ஆக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டினுடைய இதே காலாண்டில் ரூ.6102 கோடி ஆக இருந்தது.

மேலும், இந்த செப்டம்பர் காலாண்டில் மொத்த டெபாசிட் விகிதமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 13% அதிகரித்து உள்ளதாக வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சேமிப்பு கணக்கு டெபாசிட் விகிதமானது 15% மற்றும் நடப்பு கணக்கின் டெபாசிட் விகிதமானது 18% அதிகரித்து உள்ளது.

மேலும் இந்த வங்கியினுடைய வாராக்கடனும், நிகர வாரக்கடன் விகிதமும் செப்டம்பர் காலாண்டில், 4.18 சதவீதமும், 0.98 சதவீதமுமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஜூன் மாத காலாண்டின் முறையே 4.72 சதவீதம் மற்றும் 1.23 சதவீதம் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar