நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கி ஆன ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), தன் செப்டம்பர் மாத காலாண்டு முடிவை வெளியிட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாத காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் நிகரலாபம் ஆனது 52% அதிகரித்து, ரூ.4.574.16 கோடி ஆக அதிகரித்து உள்ளது. அதே போல், கடந்த ஆண்டின் இதே செப்டம்பர் மாத காலாண்டில் ரூ.3,011.7 கோடி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதே காலாண்டின் அடிப்படையில் ஒப்பிட்டு பார்க்கையில் 9% அதிகரித்து உள்ளது. கடந்த ஜூன் மாத காலாண்டில் ரூ.4,189.3 கோடி லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல வரிக்கு முந்தைய லாபம் ஆனது ரூ.6,341.45 கோடி ஆக அதிகரித்து உள்ளதாகவும், மேலும், இது முந்தைய ஆண்டை விட 25.33 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதே போல கடந்த காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 14.3 சதவீதம் அதிகம் ஆகும்.

மேலும், மும்பையை தலைமை இடமாகக் கொண்டுள்ள இவ்வங்கியினுடைய செயல்பாட்டு லாபம் ஆனது 12 சதவீதம் ஆக அதிகரித்து, ரூ.16,460 கோடி ஆக அதிகரித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டில் ரூ.14,714 கோடி ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல வங்கியின் மொத்த செயல்படாமல் உள்ள சொத்துகளின் மதிப்பானது ரூ.1.25 டிரில்லியன் ஆக குறைந்து உள்ளது. இது கடந்த ஜூன் மாத காலாண்டில் ரூ.1.29 டிரில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த மொத்தம் செயல்படாமல் உள்ள சொத்துகளின் மதிப்பு 5.28 சதவீதம் ஆக குறைந்து உள்ளது. இது கடந்த ஜூன் மாத காலாண்டில் 5.44 சதவீதமாக இருந்தது.

நிகர வாரக்கடனின் மதிப்பு ரூ.36,450.7 கோடி ஆக குறைந்து உள்ளது. இதுவே கடந்த ஆண்டில் ரூ.42,703.6 கோடி ஆக இருந்துள்ளது. இதற்கிடையில் வங்கி பங்கின் விலையானது 1.12 சதவீதம் ஏற்றம் அடைந்து ரூ.207.05 ஆக முடிவடைந்துள்ளது.

Author – Gurusanjeev Sivakumar