10,000 பேருக்கு சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வேலை:

தூய்மை பணியாளர்கள், செக்கியூரிட்டி, இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள், ரிக்சா ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு ஒன்று சென்னை மாநகராட்சி சார்பில் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மையை சென்னையிலேயே ஏழு மண்டலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கிய கட்டத்தில், இப்பணிக்கு அதிகமான பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் அதற்காக இந்த வேலைவாய்ப்பு சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 18 வயது முதல் 50 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண், பெண் ஆகிய இருபாலரும் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு நேர்முகத் தேர்வின் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.