இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்களை நம் தமிழகத்தில் தொடங்கவதற்கு MOU கையெழுத்தாகி உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.

42 புதிய தொழில் திட்டங்கள்:

நம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘ஏப்ரல்-2020 முதல் ஜூன்-2020 காலத்தில் “அதிக புதிய முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவில், தமிழகம் தான் முதல் மாநிலம்” ஆக உள்ளதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறியிருந்தார்.

இந்த கொரோனா காலத்தில் 42 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்க #MOU (Memorandum of Understanding) கையெழுத்தாகி உள்ளன’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Author – Gurusanjeev Sivakumar