கோவிட்-19 பாதித்த பல துறைகளுள் விமானத் துறையும் முக்கியமானது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கொரோனா நோய் தோற்று குறைந்து வருவதாலும், தடுப்பூசிகள் சரிவர வழங்கப்பட்டதாலும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு விமான சேவை துவங்கி விட்டது. தொழில் நிமித்தமாகவும் சுற்றுலாப் பயணங்களும் இப்போது மீண்டும் உற்சாகம் பெற்றுள்ளன என்றே சொல்லலாம்.

இதனால் ஏப்ரல், மே மாதங்களில் மந்த நிலையில் இருந்த விமான போக்குவரத்து இப்போது ஏற்றமடைந்து வருகிறது. ஜூன் – அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட உள்நாட்டு பயணிகளின் போக்குவரத்து 17% வளர்ச்சியடைந்துள்ளது.

இந்த வளர்ச்சி கூடிய விரைவில் வேகம் பெற்று 2023-ம் நிதியாண்டில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் அடுத்த 2024-ம் நிதியாண்டில் சர்வதேச விமானப் போக்குவரத்தும் கொரோனாவுக்கு முந்தய நிலையை அடையும் என எதிர்பார்க்கின்றனர் வல்லுநர்கள்.

2022-ம் நிதியாண்டில் விமானத் துறையின் செயல்பாட்டு வருமானம் ரூ.14000 கோடியாகவும் லாபம் ரூ.3250 கோடியாகவும் இருக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தய 2021-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது வளர்ச்சியே. கடந்த ஆண்டு செயல்பாட்டு இழப்பு மட்டும் ரூ.1450 கோடி.