நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மார்ச் மாத இறுதி கட்டத்தில் ஆரம்பமாகி பல துறைகளில் பாதிப்பினை ஏற்படுத்தியது. மேலும், இதில் வாகன விற்பனை ஆனது பெருமளவு வீழ்ச்சியினை ஏற்படுத்தியது. ஊரடங்கானது தளர்வு அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வந்தாலும் வாகன விற்பனை ஆனது மிகவும் மோசமான நிலையில் தான் இருந்து வருகிறது.

இருப்பினும், அக்டோபர் மாத காலகட்டத்தில் ஒட்டுமொத்த விற்பனையில் பயணிகளின் வாகன விற்பனையானது 18% வளர்ச்சியை பெற்றது. ஆனால், வாகனப் பதிவின் வாயிலாக சில்லறை விற்பனை 9% வீழ்ச்சியை கண்டுள்ளது.

AUTOMOBILE DEALER ASSOCIATION வெளியிட்டு உள்ள அறிக்கைபடி, அக்டோபர் மாத காலகட்டத்தில் மாதாந்திர அடிப்படையிலான ஒட்டுமொத்த வாகனப் பதிவில் 5% வளர்ச்சியை பெற்றுள்ளது.

செப்டம்பர் மாத காலகட்டத்தில் 24% வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கார் விற்பனையில் வீழ்ச்சியை கண்டிருந்தாலும் டிராக்டருக்கான வாகனப் பதிவில் 55.5% வளர்ச்சியை பெற்றுள்ளது.

மேலும், இரு சக்கர வாகனத்தை பொறுத்தவரை, அக்டோபர் மாத காலகட்டத்தில் வாகனப் பதிவு 27% வீழ்ச்சி அடைந்துள்ளது. 3 சக்கர வாகனப் பிரிவில் 64.5 சசதவீதம் மற்றும் டிரக் & பேருந்துகள் பிரிவில் 30% சரிவை கண்டுள்ளது குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக AUTOMOBILE DEALER-கள் கூட்டமைப்பினுடைய தலைவர் வின்கேஷ் குலாத்தி அவர்கள் கூறும்போது, மாதாந்திர அடிப்படையில் அக்டோபர் மாத காலகட்டத்தில் வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு பார்க்கையில் வீழ்ச்சியானது தொடர்கிறது. அக்டோபர் மாத காலகட்டத்தில் நவராத்திரி பண்டிகையின் காரணமாக 9 நாட்களில் வாகனப் பதிவில் சில வளர்ச்சி ஆனது இருந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar