ஆப் டெவலப்பர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு மற்றொரு நிவாரணமாக, மார்ச் 2022-ல் அமலுக்கு வரவிருந்த தனது புதிய Play Store கொள்கை அக்டோபர் 2022 முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது.

இந்த நிவாரணம் “UPI மற்றும் வால்ட்கள் உட்பட வசதியான பயனர் கட்டண முறைகள் மூலம் தொடர்ச்சியான பேமெண்ட்டுகள் செலுத்த தேவைப்படும் பிராடக்ட் சப்போர்ட்களை இந்தியாவில் டெவலப்பர்களுக்கு வழங்கும். மேலும் இதனால் இந்தியாவின் தொடர்ச்சியான டிஜிட்டல் பேமெண்ட் வழிகாட்டுதல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு வேண்டிய கூடுதல் நேரத்தை அளிக்கும் என்று இணையதள ஜாம்பவான் கூறுகிறார்

இரண்டாம் முறையாக நீட்டிக்கும் காலக்கெடு

கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக இந்த காலக்கெடுவை கூகுள் நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் payment விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய அதிக கமிஷன், கட்டணக் கொள்கைகளில் மாற்றம் ஆகியவற்றை செய்ய இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள ஆப் டெவலப்பர்கள், ஸ்டார்ட் அப் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் கொடுத்த கூடுதல் அழுத்தத்தினால் இந்த கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் சுற்றுச்சூழல் அமைப்பை திருப்திப்படுத்த கமிஷன் கட்டணத்தை 30% லிருந்து 15% ஆக குறைத்திருந்தது.

ஒரு கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்தியாவில் டெவலப்பர் சுற்றுச்சூழல் அமைப்பின் தனித்துவமான தேவைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம் மற்றும் அவர்களின் வளர்ச்சிப் பயணத்தில் கூட்டுசேர்வதில் உறுதியாக இருக்கிறோம். அக்டோபர் 2020 இல், இந்தியாவில் உள்ள டெவலப்பர்கள் Play இன் பில்லிங் அமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கான காலக்கெடுவாக மார்ச் 31, 2022 தேதியை அறிவித்திருந்தோம். அதை இப்போது 31, அக்டோபர் 2022-க்கு நீட்டித்துள்ளோம்” என்று கூறினார்.

ஜூலை மாதம் முதல் குறைக்கப்பட்ட சேவை கட்டணம்

ஜூலை மாதத்தில் இந்நிறுவனம் ஆண்டு டெவலப்பர் வருவாயில் முதல் $1 மில்லியன் (USD)க்கான சேவைக் கட்டணத்தை 15% ஆகக் குறைத்தது. அதன் பின் அக்டோபரில், Google Play-யின் சேவைக் கட்டண மாதிரியில் மேலும் சில மாற்றங்களை Google அறிவித்தது. சந்தாக்களுக்கான கட்டணத்தை 30% முதல் 15% வரை குறைத்தது மற்றும் Play Media Experience திட்டத்தில் குறிப்பிட்ட சில ஆப்களுக்கான கட்டணத்தை 10% வரை குறைத்தது.

வேறு சில கட்டண வழிமுறைகளுக்கு அனுமதி கோரி இந்திய டெவலப்பர்கள் கூகுளிடம் வைக்கும் கோரிக்கை

பயனாளர்களை பொறுத்த வரையில் இந்திய சந்தை மிகப்பெரிய ஒன்றாகும். ஆகையால் இந்தியாவில் உள்ள டெவலப்பர்களிடமிருந்து வரும் அழுத்தத்தை இந்நிறுவனம் நன்கு கவனித்து வருகிறது. இந்திய டெவலப்பர்கள் இந்நிறுவனத்திடம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு வேறு சில கட்டண வழிமுறைகளையும் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இடைக்கால நிவாரணம் கோரி CCI ஆணையத்தில் ADIF தாக்கல் செய்த மனு

அலையன்ஸ் ஆஃப் டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளை (ADIF) அக்டோபர் மாதம் The Competition Commission of India (CCI) ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அம்மனுவில் மார்ச் 2022 முதல் நடைமுறைக்கு வரவிருந்த கூகுளின் புதிய PlayStore கொள்கையில் இருந்து இடைக்கால நிவாரணம் கோரியது.