காலாவதி ஆன சுகாதாரம இல்லாத இனிப்பு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ஆனது இந்த அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்) இனிப்புகள் தயாரிப்பை குறித்துப் புதிய விதிகளை வெளியிட்டு உள்ளது.

காலாவதி ஆன இனிப்பு விற்பனைக்கு அபராதம்:

இனிப்பு தயாரிப்பு பாக்கெட்களில் சில நிறுவனங்கள் காலாவதி தேதியை பதிவு செய்வதில்லை. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சட்டத்தின்படி, பழைய காலாவதி ஆன இனிப்புகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதார அபாயங்களை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை ஆனது எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதத்திலேயே இந்த திட்டம் ஆனது அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், கோவிட்-19 தொற்றின் காரணத்தினால் தற்சமயம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கமலேஷ் பாய் அவர்கள் தெரிவித்த கருத்தில், மத்திய அரசின் இந்த முடிவானது சிறு தொழில் செய்பவர்களின் இடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், இனிப்புகள் எப்போது வேண்டுமானாலும் கெட்டுவிட வாய்ப்புள்ளது. இனிப்புகளின் காலாவதி தேதி இனி வெளியிடப்படும் என்று கூறினார்.

Author – Gurusanjeev Sivakumar