கிளவுட் சேவை வழங்கும் நிறுவனமான ரூட் மொபைல் கடந்த 45 நாளில் முதலீடு செய்தவர்களுக்கு அதிகமான லாபத்தைக் கொடுத்து உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி இந்த நிறுவனம் ஐபிஓ-ல் ஒரு பங்கு விலையை ரூ.350 ஆக விற்பனை செய்த நிலையில், நேற்று (செவ்வாய்கிழமை) காலை வர்த்தகத்தில் ஒரு பங்கு விலையானது ரூ.1150 வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூட் மொபைல்:

இதன் மூலமாக கடந்த 45 நாளில் ரூட் மொபைல் நிறுவனத்தோடு முதலீடு செய்த நபர்களுக்குச் கிட்டத்தட்ட 228% லாபம் ஆனது கொடுத்துள்ளது.

ரூட் மொபைல் கடந்த மாதத்தில் மட்டுமே 42.59% வளர்ச்சியையும், கடந்த ஒரு வாரத்தில் 34.69% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் சரிவடைந்தது. பின்னர்,12.25 மணி அளவில் லோவர் சர்கியூட் ஆனது 5% வீழ்ச்சியை கண்டு வர்த்தகம் முடிந்தது.

செப்டம்பர் மாத காலாண்டில் இந்த நிறுவனத்தினுடைய லாப அளவீடுகளானது 152% வரை வளர்ச்சி கண்டு கிட்டத்தட்ட ரூ.32.7 கோடியை கொடுத்து உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூட் மொபைல் ஆனது வெறும் ரூ.13 கோடி லாபத்தை மட்டும் தன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, இந்த நிறுவனம் செப்டம்பர் மாத காலாண்டில் ரூ.354.5 கோடி மதிப்புடைய வருவாயை பெற்று மேலும் 76 % வளர்ச்சியை பதிவிட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar