கோவிட்-19 ஊரடங்கிற்கு இடையே பல நிறுவனங்கள் தங்கள் வேலை ஆட்களை குறைத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், இத்தகைய சூழ்நிலையிலும் வாடகை கார் சேவை நிறுவனமான ஓலா, புனேவில் புதிதாக தொழில்நுட்ப மையம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஓலா நிறுவனம்:

மேலும், வரும் ஆண்டுகளில் 1000 பொறியாளர்களை பணியில் அமர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. இது பெங்களுருவிற்கு அடுத்ததாக ஓலாவினுடைய, 2-வது பெரிய தொழில் நுட்ப மையம் ஆகும். அதனுடன் ஓலாவினுடைய அனைத்து வணிகம், உலகளாவிய மற்றும் உள்ளூர் தீர்வுகளை இது நிவர்த்தி செய்யும் என ஓலா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

இந்த காலாண்டின் இறுதிக்குள் புனே அலுவலகம் செயல்பட உள்ளதாகவும், வருகின்ற மூன்று ஆண்டுகளில் 1000 திறமைவாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் பனியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஓலா நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தொழில்நுட்ப மையத்தினை மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புனேவில் அமைக்கப்பட உள்ள தொழில்நுட்ப மையம் திறமை மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புக்காக பயனுள்ளதாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது. ஓலா நிறுவனம் போன்று உள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் விருப்பமான இடமாக புனே உள்ளது. இதன் காரணமாக ஓலா நிறுவனத்தின் தொழில்நுட்ப மையமானது புனேவில் திறக்கப்பட உள்ளது.

ஓலா நிறுவனத்தின் போட்டி நிறுவனமாக உள்ள உபெர் நிறுவனம் சமீபத்தில், இந்தியாவில் தன்னுடைய பொறியல் குழுவை வலுப்படுத்த உள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் தற்சமயம் ஓலா நிறுவனத்திடமிருந்து அதேபோல அறிவிப்பு வரவுள்ளது.

பொருளாதார வளர்ச்சி தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளது நல்ல செயல் தான். ஒரு இந்திய நிறுவனம் வளர்ச்சி அடைவது மிகவும் சிறந்த விஷயம் தான்.

Author – Gurusanjeev Sivakumar