பங்குச் சந்தையில் நேற்றைய ஒரே நாளில் மட்டும் சென்செக்ஸ் 1097 புள்ளிகள் சரிந்துள்ளது.

நேற்று பங்குச் சந்தையில் மிகவும் கடுமையான சரிவு ஏற்பட்டது. பெரும் அளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்ட காரணத்தினால் வர்த்தக முடிவில் 1097 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. RELIANCE INDUSTRIES, INFOSYS, TCS உட்பட முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை கடுமையான அளவில் சரிந்தது தான் பெரும் சரிவிற்கு முக்கியக் காரணம் ஆகும்.

RELIANCE INDUSTRIES, HDFC BANK, ICICI BANK உட்பட சில நிறுவனங்களின் பங்குகள் விலையானது குறைந்ததால் தான் 500 புள்ளிகள் வரை சரிவதற்கு காரணமாக இருந்தன. கடந்த 3 வார காலகட்டத்தில் முன்னதாக எப்போதும் இல்லாத அளவிற்கு சில கடுமையான ஏற்ற, இறக்க சூழல்நிலையானது நேற்று பங்குச் சந்தையில் தென்ப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் புதியதாக கோவிட்-19 வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அங்கிருக்கும் பங்குச் சந்தைகள் ஆனது கடுமையான சரிவினை எதிர்கொண்டது. இதன் காரணமாக நம் இந்திய பங்குச் சந்தையிலும் சரிவு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், மும்பை பங்குச் சந்தையில் 1097 புள்ளிகள் சரிந்ததன் காரணமாக குறியீட்டெண் 39,696 ஆக குறைந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் ஆனது 304 புள்ளிகள் வரை சரிந்ததால் 11,666 ஆக ஆனது.

HCL TECHNOLOGIES, MAHINDRA, AIRTEL, BAJAJ FINANCE, INFOSYS உட்பட சில நிறுவனங்களின் பங்குகள் ஆனது 2.60% முதல் 3.76% வரையில் சரிந்துள்ளன. அதே போல, TATA STEELS, HERO MOTOCORP, JSW STEELS ஹிண்டால்கோ, உட்பட சில நிறுவனங்களின் பங்குகள் 1.15% முதல் 2.52% வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar