ஸ்ரீராம் கேபிடல் லிமிடெட்டின் கீழ் கடன் வழங்கும் துணை நிறுவனங்களாக இரண்டு நிறுவனங்களை இணைக்க உள்ளதாக ஸ்ரீராம் குழுமம் அறிவித்துள்ளது. நுகர்வோர் நிதிப்பிரிவான ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வணிக வாகன நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் உடன் இணைக்கப்படும். இது ஒரு நீண்ட காலத்திட்டம் என்றே தெரிகிறது.

நான்கு உறுப்பினர்களை கொண்ட மேலாண்மை குழு

சென்ற மாதத்தில் இக்குழுமத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிட ஒரு மேலாண்மை குழுவை அமைத்தபின் ஒரே கடன் வழங்கும் நிறுவனத்தை உருவாக்குவதே ஸ்ரீராம் குழுமத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி ஸ்ரீராம் கேபிடல் மேலாண்மை இயக்குனர் DV ரவி, முழுநேர இயக்குனர் R. துருவாசன், நிர்வாகமற்ற இயக்குநர் உமேஷ் ரெவங்கர் மற்றும் ஜஸ்மிட் சிங்க் குஜ்ரால் ஆகிய நான்கு உறுப்பினர்களை கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது.

ஸ்ரீராம் குழுமத்தின் சொத்து மதிப்பு

ஸ்ரீராம் உரிமையாளர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீவெல் அறக்கட்டளை ஆகியவை 42.9% ஸ்ரீராம் கேபிட்டலின் பட்டியலிடப்படாத பங்குகளை வைத்திருக்கின்றன, இதுவே அனைத்து வணிகங்களுக்கும் ஹோல்டிங் நிறுவனமாகும். குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன என்று தெரிகிறது.

BSE வர்த்தகத்தில் ஸ்ரீராம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு மாற்றம்

இந்த இரட்டை ஸ்ரீராம் குழும நிறுவனங்கள் BSE-ல் கலப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டபோது, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் பங்கு மதிப்பு 1.65% சரிந்தது, ஸ்ரீராம் சிட்டி யூனியன் 0.60% உயர்ந்தது.