நவம்பர் 2021-ல் இந்தியாவில் ரத்தினங்கள், நகைகள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சற்றே சரிவை சந்தித்துள்ளன. ஆண்டுக்கு ஆண்டு 26.49% என $29.88 பில்லியன் அளவுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. மேலும் இது அக்டோபர் 2021 ஏற்றுமதியை விட மிகவும் குறைவு. அக்டோபர் மாதத்து மொத்த ஏற்றுமதி மதிப்பு $35.47 பில்லியன்.

இது தவிர இன்ஜினியரிங், பெட்ரோலியம், கெமிக்கல்ஸ், எலக்ட்ரானிக், பருத்தி நூல், துணிகள், ஜவுளிகள், கடல் பொருட்கள் ஆகிய அனைத்து பொருட்களும் நவம்பர் 2021-ல் அதிக அளவில் ஏற்றுமதியை பதிவு செய்துள்ளன.

இந்தியாவின் ஏற்றுமதி ஒரு சிறிய ஒப்பீடு (ஏப்ரல்-நவம்பர் 2021)

அக்டோபர் 2021 மொத்த ஏற்றுமதி மதிப்பு – $35.47 பில்லியன்
நவம்பர் 2021 மொத்த ஏற்றுமதி மதிப்பு – $29.88 பில்லியன்
ஏப்ரல்-நவம்பர் 2021 மொத்த ஏற்றுமதி மதிப்பு – $262.46 பில்லியன் (2020-ம் ஆண்டு ஏற்றுமதியை விட 50.71% கூடுதல்)

வர்த்தக பற்றாக்குறை – இந்திய வர்த்தக துறையின் ஆரம்ப மதிப்பீடு

கடந்த புதன்கிழமை அன்று வர்த்தக துறை பகிர்ந்து கொண்டுள்ள ஆரம்ப மதிப்பீட்டின்படி நவம்பர் 2021-ல் இந்தியாவில் இறக்குமதி $53.15 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது (57.18% உயர்வு). இதனால் இரட்டிப்பாக்கியுள்ள வர்த்தக பற்றாக்குறை $23.27 பில்லியன். நவம்பர் 2020-ல் வர்த்தக பற்றாக்குறை 76,425 கோடி ரூபாய். தற்போது அது 1.74 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிகிறது. 9 ஆண்டுகளுக்கு முன் 2012 அக்டோபர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1.52 லட்சம் என்று பதிவு சொல்கிறது. எனில் நவம்பர் 2021-ல் இன்னும் உயர்வை எட்டியுள்ளது.

வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்க என்ன காரணம்?

பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் என வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலியம் அல்லாத இறக்குமதி & ஏற்றுமதி மதிப்பு கணக்கீடு

ஏப்ரல்-நவம்பர் 2021-ல் இறக்குமதி மதிப்பு – $384.44 பில்லியன் (75.39% உயர்ந்துள்ளது), இது வர்த்தகப் பற்றாக்குறையை $121.98 பில்லியனாக விரிவாக்கியது. நவம்பர் 2021-ல் ஏற்றுமதி மதிப்பு – $26.06 பில்லியன்