தனி நபர் வருவாயில் வங்காளதேஷம், இந்தியாவிற்கு நெருக்கமாக வந்துவிட்டதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து உள்ளது.

தனி நபர் ஜிடிபி விகிதம்:

சர்வதேச நாணய நிதியமானது உலக நாடுகள் தொடர்பான பொருளாதார வளர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்தமான உள்நாட்டு உற்பத்தியில் தனி நபரின் வருவாயை, வங்காளதேஷ நாடு நம் இந்திய நாட்டையே முந்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

2021-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் தனி நபர் வருமானமானது 10.3% குறைந்து, 1877 டாலர் ஆக குறையும் எனவும், இதே காலத்தில் வங்காளதேஷத்தின் தனி நபர் வருமானமானது 4% அதிகமாகி, 1888 டாலர் ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் IMF தெரிவித்து உள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயின் பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதி முதல், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் முதல் காலாண்டிலேயே 40 ஆண்டில் இல்லாத அளவிற்கு இந்திய பொருளாதாரமானது வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் 2-வது காலாண்டில் எந்த அளவிற்கு வீழ்ச்சி அடையும் என்று தெரியவில்லை.

பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊராடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், தற்சமயம் வரையிலும் ஒரு முழுமையான பொருளாதார வளர்ச்சி தொடர்பான அறிகுறிகள் தென்படவில்லை. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவினுடைய ஜிடிபி விகிதமானது மிகவும் மோசமான வீழ்ச்சி காண வாய்ப்புள்ளதாக நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வங்காளதேஷத்தை விட இந்தியாவினுடைய தனி நபர் வருவாய், சில ஆண்டிற்கு முன்பு வரையும் சற்று அதிகமாக தான் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவினுடைய சேமிப்பு மற்றும் முதலீடுகளானது இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மிகவும் மந்தமாக தான் உள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் வங்காளதேஷத்தின் மேற்கண்ட சில விகிதங்களானது ஓரளவு கணிசமான உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவினுடைய பொருளாதாரமானது, கடந்த 1990-1991 காலத்தின் நெருக்கடிக்குப் பின்னர் இந்தியாவின் பொருளாதாரமானது தற்போது சரிவடையக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பிறகு தெற்கு ஆசியாவில் இந்தியா மிக மோசமாக நிலையில் பாதிப்படையும் பொருளாதாரமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar