இந்திய பணத்திற்கு நிகரான ‘டிஜிட்டல் கரன்சி’யை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில், CBDC எனும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி வெளியீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நடைபெற்ற கூட்டத்தில் வங்கி பங்குதாரர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்திய வங்கி துறை முழுமையிலும் சென்ட்ரல் வங்கியின் டிஜிட்டல் கரன்சி (CBCD) ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வை இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இரண்டும் நடத்தி வருகிறது.
சில ஆண்டுகளாகவே CBDC-கள் பற்றி பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடத்தப்பட்டு வந்தாலும் இதுவரை எதுவும், எங்கும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இருப்பினும், மேலைநாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், சீனா ஆகிய நாடுகள் சென்ற சில மாதங்களில் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி CBDC திட்டங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை விளைவிக்கும் என்று பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு, அதன் பழக்கம் அதிகரித்து வருவது குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நம்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருக்கும் பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது என்று தெரிகிறது.

ஆகவே, இந்திய பணத்திற்கு நிகராக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் என்பதில் ரிசர்வ் வங்கி முழுமையாக ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு கிரிப்டோகரன்சி சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிகிறது