ஆதித்யா பிர்லா குழுமத்தின் துணை நிறுவனம் தான் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம். இந்நிறுவனம் மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற ஒரு மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.

இது இந்தியாவினுடைய முன்னனி சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் தயாரிக்கின்ற ஒரு நிறுவனம் ஆகும். நாட்டில் கட்டுமான பணியின் வளர்ச்சி ஆனது அதிகரித்து வரும் இச்சமயத்தில் இந்நிறுவனம் தன்னுடைய திறனை சற்று படிப்படியாக விரிவாக்கம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்நிறுவனம் அதன் திறனை அதிகரிப்பதற்காக ரூ.5,477 கோடி முதலீட்டை செய்யவுள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா அவர்கள் கூறும் போது, உட்கட்டமைப்பு துறையில் இந்த முதலீடு ஆனது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கோவிட்-19க்கு பின்னர் இது ஆரோக்கியமான வளர்ச்சியை கண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். ஆக சிமெண்ட்டின் தேவை அதிகரித்து வரும் இந்நிலையில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் நன்கு நிலை நிறுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.

இந்த விரிவாக்கத்தில் ராஜஸ்தானில் உள்ள பாலி என்னும் இடத்தில் சிமெண்ட் ஆலை ஒன்றும் அடங்கும். மேலும், ஓடிசா, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகாரில் தற்சமயம் நடைபெற்று வருகின்ற விரிவாக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும்.

குறிப்பாக, இந்த விரிவாக்கம் ஆனது நல்ல விஷயம் என்றாலும் கூட, அதனுடைய பங்கு விலை ஆனது எதிரொலிக்கவில்லை. ஏனென்றால் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தினுடைய பங்கு விலை ஆனது முடிவில் 0.77% குறைந்து, ரூ.4,895 ஆக முடிவடைந்து உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar