செப்டம்பர் மாத காலகட்டத்தின் உற்பத்தி மற்றும் சேவைத் துறை தரவுகளும், அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளும், குறைந்து வரும் கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கையும் இந்தியச் சந்தை மீதுள்ள நம்பிக்கை ஆனது அன்னிய முதலீட்டாளர்களுக்கு இடையே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நவம்பர் மாத காலகட்டத்தில் மட்டுமே இந்தியச் சந்தையில் FPI முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட் ரூ.62,951 கோடி மதிப்பிலான முதலீட்டைச் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்திய பங்குச்சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் FPI முதலீட்டாளர்கள் ரூ.60,538 கோடியை முதலீடு செய்துள்ளார்கள். தேசியப் பாதுகாப்பு வைப்பகம் தரவின்படி இந்த நவம்பர் மாத காலகட்டத்தில் ரூ.60358 கோடி முதலீடு வரலாற்று உச்சமாக உள்ளது

நவம்பர் 3-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரையிலான காலத்தில் FPI முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட் ரூ.62,951 கோடி மதிப்பிலான தொகையினை இந்தியச் சந்தையில் முதலீடு செய்து உள்ளனர். இதில் ரூ.60,358 கோடி தொகையினைப் பங்குச்சந்தையிலும், ரூ.2,593 கோடி பங்குகளைக் கடன் சந்தையிலும் முதலீடு செய்து உள்ளார்கள்.

அன்னிய முதலீட்டாளர்கள் தற்போது வல்லரசு நாடுகளை காட்டிலும், வளரும் நாடுகளில் அதி அகளவில் முதலீட்டை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் கோவிட்-19 ஆல் உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியினை ;;அடைந்துள்ள நிலையில், வளரும் நாடுகளினுடைய வளர்ச்சி விகிதம் ஆனது தற்சமயம் மிகவும் அதிகமாக உள்ளது.

இதன் காரணமாகச் சர்வதேசச் சந்தை முதலீட்டாளர்கள் இப்போது இந்தியாவில் வளர்ச்சியின் வாய்ப்புகள் ஆனது அதிகமாக உள்ள காரணத்தினால் நவம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.62,951 கோடி மதிப்புடைய முதலீடுகளை செய்துள்ளார்கள்.

அதே போல, அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தவிர தைவான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் முதலீடுகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar