இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் சிறு விவசாயிகளின் வேளாண் வணிகக் கூட்டமைப்பு (SFAC) கொள்கை வழிகாட்டுதல்களுடன் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளால் உருவாக்கப்பட்டதே அக்ரோடெக் ஃபார்மர்ஸ் ப்ரொட்யூசர் கம்பெனி லிமிடெட். நாங்கள் இணங்குகிறோம். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள சிறு மற்றும் குறு நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன் மூலம் வறுமையைக் குறைப்பதே இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலக்காகும்.

கண்முன் இருக்கும் சந்தைப்படுத்துதல் சவாலை எதிர்கொள்ளும் அக்ரோடெக்

வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யத்தெரியும் விவசாயிகள் பலரும் அறிந்திடாத ஒரு செயல் திறமையான விற்பனை முறை. விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாவிட்டால் விவசாயியின் நிலை என்றும் துயரம் தான். பொருட்களை சந்தைப்படுத்துதல் அவர்களுக்கு எப்போதுமே ஒரு சவால் தான். இந்த சவாலை திறமையுடன் எதிர்கொள்ள உருவாக்கப்பட்டதே இந்த அக்ரோடெக் மார்ட்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து வாங்கி நுகர்வோருக்கு நேரடியாக எளிய முறையில் “உழவன்” என்ற பெயரில் பேக்கிங் செய்து விற்பனை செய்கிறது.

என்னென்ன விளை பொருட்களை இந்நிறுவனம் வாங்கிக்கொள்கிறது?

விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களாகிய நெல், உளுந்து, துவரம் பருப்பு, கேழ்வரகு, கம்புனு, மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா அரிசி வகைகள் என பல பொருள்களை நேரடி கொள்முதல் செய்கிறது இந்நிறுவனம்.

அக்ரோடெக் மார்ட்டின் சிறப்பம்சங்கள் பற்றி சிறு பட்டியல்

இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல், மதிப்புக்கூட்டி விற்பனை செய்தல் ஆகிய திட்டங்களை விவசாயிகளுக்காக சிறப்பாக செய்து வருகிறது. உழவர் நிறுவனம் மூலமாக 8000-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் ஆடு மற்றும் கோழி வளர்ப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற உறுதுணையாக உள்ளது.

வெளிச் சந்தையில் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விலையைகாட்டிலும் கூடுதல் விலைக்கு விளைபொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கி விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் சில்லறை வர்த்தகத்தில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். மதிப்பு கூட்டுதல் வியாபாரத்தின் அடிப்படையில் சரியான விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்கிறது அக்ரோடெக்.

வீட்டிற்குத் தேவையான மாதாந்திர மளிகை பொருட்களை கிராமப்புற மக்கள் வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்கின்றனர். மேலும் இந்தத் திட்டத்தை கிராமப்புற பெண்களின் வசதிக்கேற்ப எளிய தவணை முறையையும் அறிமுகம் செய்துள்ளனர்.

உற்பத்தியாளர், நுகர்வோர் இருவருக்கும் மத்தியில் இடைத்தரகர்கள் இல்லாமல் இருப்பதால் உற்பத்தியாளருக்கு சரியான விற்பனை விலையும், நுகர்வோருக்கு சரியான கொள்முதல் விலையும் கிடைப்பதை அக்ரோடெக் மார்ட் உறுதிசெய்கிறது. 25 மாவட்டங்களில் தனது கிளைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிகலாபம் பெற்று பயனடையலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான விவரங்களை பெறவேண்டுமாயின் 9884299871 என்ற கைபேசி எண்ணிலோ info@agrotechfpc.org என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.