Yahoo நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை தமக்கு ஏற்றதாக இல்லை என்பதாலும், இந்தியாவின் இந்த புதிய சட்டம் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் உரிமையைக் கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இந்தியாவில் இருந்து வெளியேறுவதாகவும் Yahoo அறிவித்துள்ளது.

அதென்ன அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை? அதாவது இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு டிஜிட்டல் ஊடகங்கள் மத்திய அரசின் 26% அந்நிய நேரடி முதலீட்டுக்கு இணங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த சட்டம் அக்டோபர் 15, 2021ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது. 26%க்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீடு வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி பெறுவது அவசியம். மேலும் அனுமதி பெற்ற நிறுவனங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் வெளிநாட்டு பங்குகளை 26%க்குள் குறைக்கவேண்டும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி கிரிக்கெட், பொழுதுபோக்கு, செய்தி உள்ளிட்ட சேவைகளை இன்று முதல் Yahoo நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதேசமயம் yahoo mail தொடர்ந்து இயங்கும். மத்திய அரசின் புதிய கொள்கை yahoo மெயில்-ஐ கட்டுப்படுத்தாது என்று தெரிகிறது. ஆகவே mail உபயோகிப்பாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை