தமிழக அரசின்  2021-22 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை பல்வேறு முக்கிய அம்சங்களை நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி 2021-22ஆம் ஆண்டிற்கு விதைப்பண்ணை அமைக்கும் திட்டத்தின் மூலம் 3600 ஹெக்டரும் விதைச் சான்று பெறுவதற்கு 6665 மெட்ரிக் டன்னும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரம் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

இம்மாதத்தில் 851 ஹெக்டர் விதைப்பண்ணை இலக்கிற்கு 1035 ஹெக்டர் விதைப்பண்ணை அமைத்தும், 2534 மெட்ரிக் டன் விதைச்சான்று பணியும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே விவசாயிகள் யாரவது விதைப்பண்ணை அமைக்க விரும்பினால் அவர்கள் விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.