டிஜிட்டல் உலகில் இந்தியாவின் சாதனைகள்

‘ஆசாதி கா டிஜிட்டல் மஹோத்சவ்’ என்ற தலைப்பில் தலைநகரில் நடைபெற்ற ஒரு வார கால கண்காட்சியின்போது டிஜிட்டல் உலகில் இந்தியாவின் சாதனைகள் காண்பிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய IT அமைச்சர் “UPI போன்று எளிமையான டிஜிட்டல் தளத்தை உருவாக்கி கொடுங்கள். அதன் மூலம் MSME மற்றும் அது போல் இருக்கும் பிற நிறுவனங்கள் பயனடையும் என வங்கிகளிடம் IT அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 5ம் தேதி, அன்று ஐடி துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில் “UPI போன்ற சக்திவாய்ந்த, தடையற்ற மற்றும் வலுவான ஒரு புதுமையான டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதன் மூலம் MSME, சிறு வணிகர்கள் மற்றும் கோபுரத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கும் கூட விரைவான மற்றும் எளிதான கடன் வழங்க முடியும். ஆகவே அது போன்ற தளத்தை உருவாக்குங்கள் என வங்கித் துறைக்கு அறிவுறுத்தினார். இத்தகைய புதிய தளங்கள் உருவாக்க தேவைப்படும் அனைத்து ஆதாரங்களும் ஏற்கனவே இணைப்பில் உள்ளன அதாவது ஆதார் எண், பான் கார்டு, மொபைல் எண், டிஜிலாக்கர் ஆகியவை. ஆக புதிய தளங்கள் கட்டுமானத்தில் வங்கிகள் விரைவில் முயற்சி எடுக்கலாம்.

இன்று இந்தியா டிஜிட்டல் துறையில் கண்டிருக்கும் வளர்ச்சி உலக நாடுகள் பலவற்றையும் பொறாமை பட வைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் தாம் தான் முன்னணியில் உள்ளதாக அந்நாடுகள் எண்ணிக்கொண்டிருந்தன.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முனைப்பாடு

மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றார். உலகிற்கு நாம் முன்னோடியாக விளங்குகிறோம், தொடர்ந்து நாம் முன்னணியில் இருக்கவேண்டும் என்றார். நம் சுற்றுச்சூழல் அமைப்பு செழித்து வளர ஒரு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றார்.

புதிய அறிமுகங்கள், “Rupay-on-the-Go” அதிகாரப்பூர்வ வெளியீடு

இந்நிகழ்ச்சியின் போது நடைபெற்ற மேலும் பல நிகழ்வுகள் – பாங்க் ஆஃப் பரோடா மற்றும் சிட்டி யூனியன் வங்கி இரண்டும் “Rupay-on-the-Go” அதிகாரப்பூர்வ வெளியீட்டை அறிவித்தது. Rupay நெட்வொர்க்கில் தொடர்பு இல்லாத கிரெடிட் கார்டுகளை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிகளான PNB, Kotak, YES வங்கி, IOB, ICICI, இந்தியன் வங்கி, BOM மற்றும் CUB ஆகியவை அறிமுகப்படுத்தியுள்ளன.

கண்காட்சியில் இடம் பெற்றிருந்தவர் விபரம்

கிட்டத்தட்ட 40 ஸ்டால்கள் இடம்பெற்றிருந்த இந்த கண்காட்சியில் பல்வேறு ஃபின்டெக், வங்கிகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் கூட்டாளர்கள் பங்கேற்றனர்.