UAE – ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களுக்கு இந்திய மசாலா, முட்டை, பாலாடைக்கட்டி மற்றும் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். அவ்வாறுள்ள தனது பொருட்களுக்கு வரியில்லா சந்தை அணுகலை கோரியுள்ளது இந்திய அரசு.

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு தடை விதிக்கும் UAE

​பறவைக் காய்ச்சலின் காரணமாக தற்போது இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு 5% வரி விதிக்கிறது.

“பவுல்ட்ரி பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விற்பனை செய்ய ஆர்வமாக உள்ளோம். UAE-ல் முட்டை சந்தை மிகப்பெரிய அளவில் செயல்படுவதால் முட்டைகள் இறக்குமதியை அந்நாடு அனுமதிக்கும் என்று நம்புகிறோம்.” என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தொற்றுநோயை தடுக்க விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு நிர்ணயித்துள்ள உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேரிச்சை, தின்பண்டங்கள் மற்றும் சர்க்கரையில் செய்யப்பட்ட பொருட்களுக்கு வரிச்சலுகைகள் பெற விரும்புவதாக தெரிகிறது.

1100 பொருட்களை பட்டியலிட்டு வரியில்லா சந்தை அணுகல் பெற இந்திய அரசு ஆர்வம்

இது மட்டுமல்லாது இந்தியா வேறு பல பொருட்களுக்கும் வரியில்லா சந்தை அணுகல் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. பசுவின் இறைச்சி (உறைந்தது), சீஸ், மசாலா பொருட்கள், சில கரிம ரசாயனங்கள் மற்றும் காகித பொருட்கள். ஏறக்குறைய 1100 பொருட்களை இதற்காக தேர்ந்தெடுத்துள்ளது நம் அரசு அதில் சலவை இயந்திரங்கள், குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டிகள் (A/c), மசாலாப் பொருட்கள், புகையிலை, பருத்தி துணிகள், ஜவுளி மற்றும் தோல் ஆகியவற்றின் ஏற்றுமதியும் அடங்கும். ஒப்பந்தத்தின் மூலம் இதை அதிகரிக்க விரும்புகிறது இந்திய அரசு.

முக்கியத்துவம் பெரும் இந்தியா-UAE ஒப்பந்தம்

“அரசியல் ரீதியாக, இந்த ஒப்பந்தம் முக்கியமானது, ஏனெனில் இந்தியாவுடன் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டாம் என்று பாகிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வலியுறுத்துகிறது, ஆனால் ஐக்கிய அரபு அமீரகம் அதை புறக்கணித்துவிட்டது,” என்று ஒரு வர்த்தக நிபுணர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் இந்தியா சேவைகளின் மூலம் லாபம் அடைவதில் நிலையாக உள்ளது எனவே UAE-யுடன் நீண்ட கால வர்த்தக விசாக்களுக்கு அழுத்தம் கொடுக்க இயலும் என்றும் கூறினார்.