இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போர்டு மீட்டிங்கில் அதன் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டம் பற்றி பரிசீலனை செய்யும்
என்று பங்குச் சந்தைகளுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.

TCS இயக்குநர்கள் குழு, ஜனவரி 12, 2022 அன்று நடைபெறும் கூட்டத்தில், நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை வாங்குவதற்கான முன்மொழிவை பரிசீலிக்கும். டிசம்பர் 31, 2021 இல் முடிவடைந்த மூன்றாவது காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான நிறுவனத்தின் நிதி முடிவுகளை அங்கீகரிக்கவும் பதிவு செய்யவும் ஜனவரி 12 ஆம் தேதி குழு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 2021 காலாண்டின் இறுதியில், மும்பையைச் சேர்ந்த நிறுவனம் 51,950 கோடி ரூபாய்க்கு ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமான தொகையை இருப்பாக வைத்திருந்தது.

ஜனவரி 7-ம் தேதி, வெள்ளிக்கிழமை இறுதியில் தேசிய பங்கு சந்தையில் TCS-ன் பங்குகள் மதிப்பு 1.35% உயர்ந்து ரூ.3858.90 என முடிவடைந்தது. கடந்த ஓராண்டில் ஸ்கிரிப் 23.65% அதிகரித்துள்ளது. தனது போர்டு கூட்டத்தின் போது பங்குதாரர்களுக்கு மூன்றாவது இடைக்கால ஈவுத்தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பையும் TCS விடுக்கும் என்று தெரிகிறது.

செப்டம்பர் காலாண்டில் தனது நிகர லாபத்தை பற்றி பதிவு செய்திருந்த TCS, அதன் ஒருங்கிணைக்கப்பட்ட நிகர லாபம் ரூ.9,624 கோடி என குறிப்பிட்டிருந்தது. இது 2020-21 காலாண்டில் இருந்ததை காட்டிலும் 29% கூடுதல் ஆகும் அதாவது ரூ.7,475 கோடி.