எங்கு ஒரு நாட்டின் குடிமக்கள் கௌரவமாக, அனைவருக்கும் ஒரு தொழில், தேவைக்கு ஏற்ற வருமானம் என்று வாழ முடிகிறதோ அந்நாடு விரைவில் பொருளாதார ஏற்றம் பெற்றதாக இருக்கும். வறுமை, சமூகக் கட்டுப்பாடு போன்ற பலவற்றால் பின் தங்கியிருக்கும் பல்வேறு சாமானியர்களுக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டுதான் உள்ளது.

TCIF – டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் சமூக வடிவ வாழ்க்கையை வழங்குவதற்கு என்று ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஒவ்வொரு நபருக்குள்ளும் இருக்கும் திறமைகள் சரியான விதத்தில் வெளிப்பட்டால் அது அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் இன்னும் பலருக்கும் வெளிச்சமாக அமையும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டு அப்படி இருக்கும் எண்ணிலடங்கா நபர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வணிகதளமாக இந்த அமைப்பு செயல்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் எந்த லாப நோக்கத்துடனும் இந்த அமைப்பு செயல்படுவதில்லை.

TCIF தனக்கென்று ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று 5 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய சமூகத்திற்கு தேவையான பல சிறு குறு தொழில்கள், உற்பத்தியாளர்கள் அனைவரும் இந்த இணையதளத்தில் இணைந்து தங்கள் பொருட்களை வணிகப்படுத்தலாம். இன்னும் மக்களின் பார்வைக்கு வராத அல்லது மக்கள் மெல்ல மெல்ல மறந்து கொண்டிருக்கும் பல்வேறு இந்திய பாரம்பரிய தொழில்களும் மீட்டெழ இந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது.

மண்பானை செய்பவர்கள், பாய் பொருட்கள் செய்பவர், டெரகோட்டா, மரம், களிமண், நூல் ஆகியவை கொண்டு உருவாக்கப்படும் நகை வடிவமைப்பாளர்கள், நெசவு தொழில் செய்பவர், ஆடை மற்றும் நகை வடிவமைப்பாளர்கள், மூலிகை மற்றும் பாரம்பரிய உணவுப்பொருட்கள் தயாரிப்பவர், இன்னும் பல கைவினை கலைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்து உதவி பெறலாம்.

இப்போதிருக்கும் கொரோனா நோய் தோற்று காலத்தில் மூலிகை மாஸ்க், மூலிகை சானிடைசர் ஆகியவையும் பெண்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவையான மூலிகை சானிட்டரி நாப்கின்கள் ஆகியவை தயாரிக்கும் பல உற்பத்தியாளர்கள், இன்னும் பலர் தகுந்த மூலதன வசதியின்றி தடுமாறுகின்றனர். அவர்களுக்கு கிரவுட் பண்டிங் முறையில் நிதி உதவி ஏற்படுத்தி கொடுக்கிறது TCIF.

இந்த செய்தியை வாசிக்கும் தொழில் முனைவோர், கைவினை கலைஞர்கள், கலைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தொழில் மேம்பாடு மற்றும் வணிக வளர்ச்சிக்கு இந்த அமைப்பை தொடர்பு கொள்ளலாம். இணையதள முகவரி https://takecareinternational.org, மின்னஞ்சல் hello@takecareinternational.org, கைபேசி எண் +91 7338786888.

1000க்கும் மேல் தொண்டர்கள், 4000க்கும் மேல் பங்களிப்பாளர்கள் மற்றும் 10க்கும் மேல் பணியாளர்களை கொண்டு தனக்கென ஒரு உன்னத பாதையில் பயணிக்கிறது இந்த அமைப்பு.