பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் காலகட்டத்தில் மக்கள் மின்சார மோட்டார் பைக், கார் ஆகியவற்றை உபயோகிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத இந்த மோட்டார் வாகனங்கள் வரவேற்கத்தக்கது.

இந்த பட்டியலில் மலிவு விலையில் மின்சார கார் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா இம்மாதம் (ஆகஸ்ட்) 31ம் தேதி.  இச்செய்தி டாடா மோட்டார்ஸ் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் ஜிப்ட்ரோன் டெக்னாலஜியுடன் கூடிய “டாடா டைகர் எலக்ட்ரிக்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலிவு விலையில் வெளி வந்தாலும் நிறைய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் கொண்டதாக இந்த மின்சார கார் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கி.மீ தொலைவு வரை பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதனை வாங்க விரும்புபவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார் இந்தியாவின் மலிவு விலை கார்களில் மிகவும் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்று தெரியவருகிறது. பேட்டரி மற்றும் மோட்டார் ஆகிய இரண்டுமே 8 வருடம் / 160000 கி.மீ. வாரன்ட்டியுடன் கிடைக்கும். ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், போர்ட்டபிள் சார்ஜிங் கேபிள், ஓட்டுநர் இருக்கையின் உயரத்தை கூட்டவும் குறைக்கவும் வசதி என்று இன்னும்  பல சிறப்பான தொழில்நுட்பங்களை கொண்டது இந்த வாகனம்.

சந்தையில் வெளியாக இருக்கும் இந்த மின்சார வாகனத்தை வாங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.