GST செயல்பாடுகள் ஏறக்குறைய அனைத்து வியாபாரிகளுக்கும் இப்போது பரிச்சயமாகிவிட்டது. இந்த GST இணையதளத்தில் தங்கள் நிறுவன விற்பனை/ கொள்முதல் விபரங்களை பதிவு செய்வதன் மூலம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் ஏற்ற இறக்கங்களை வணிகவரித்துறை எளிதில் கணக்கிடமுடிகிறது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிடுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பதே நமது மத்திய அரசின் கருத்து.


E-way Bil
l எனப்படும் எலக்ட்ரானிக் கடவுச்சீட்டு – இதை இன்றுள்ள வியாபாரிகள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் டிரான்ஸ்போர்டஸ் நன்கு அறிவர் GST விதிகளின்படி ரூபாய் 50000 மதிப்பிற்கும் மேல் உள்ள பொருட்களை விற்பனை செய்யும்போது அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு E-way Bill எனப்படும் எலக்ட்ரானிக் கடவுச்சீட்டை வைத்திருத்தல் கட்டாயம்.


இவ்வாறு பதிவு செய்யப்படுகின்ற எலக்ட்ரானிக் கடவுச்சீட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஜுலை 2021-ல் பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டுகளின் நிலவரம் – முதல் 11 நாட்களில் 19.24 லட்சம், அடுத்த 7 நாட்களில் 20.4 லட்சம், அதற்கு அடுத்த வாரம் 20.2 லட்சம், ஜுலை இறுதி ஆறு நாட்களில் பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள் 24.3 லட்சம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இம்மாதத்தில் ஆகஸ்டு 15 தேதிக்குள் 20.5 லட்சம் எலக்ட்ரானிக் கடவுச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இது முதல் எட்டு நாட்களில் சராசரியாகப் பதியப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை விட 5 % அதிகரித்துள்ளது.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடவுச்சீட்டு பதிவுகள் என்பது நமது நாட்டில் வத்தகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது என்பதைக் குறிப்பதோடு இதன் வளர்ச்சி இன்னமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.