MSME அமைப்புகளுக்கு பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் மிக அதிக ஆர்வம் காட்டும் அமைப்புகளில் SIDBI-யும் ஒன்று. SIDBI தன இணையதளத்தில் பல்வேறு டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது “sidbi.in, sidbistartupmitra.in, standupmitra.in” ஆகியவற்றை தொடங்கியுள்ளது. இதில் SIDBI Udyamimitra (www.udyamimitra.in) ஒரு ஊடாடும் போரட்டலாக சேர்க்கப்பட்டுள்ள புதிய துவக்கம். இது ஸ்டாண்ட்-அப் மித்ரா போர்ட்டலின் IT கட்டமைப்பை மேம்படுத்தும் ஒரு செயல்படுத்தும் தளமாகும் மற்றும் MSMEகளின் நிதி மற்றும் நிதி அல்லாத சேவை தேவைகளை எளிதாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SME களின் தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கான ஆதரவு

ஒரு வருடத்தில் வணிகமயமாக்கப்படக்கூடிய புதுமையான வணிக யோசனைகளை (புதிய உள்நாட்டு தொழில்நுட்பம், செயல்முறைகள், தயாரிப்புகள் போன்றவை) வளர்ப்பதற்கான ஆரம்ப நிலை நிதியை இத்திட்டம் வழங்குகிறது. சிந்தனை அடிப்படையிலான புதுமையான முயற்சிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) போட்டித்தன்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் உணர்வுகளை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

MSMEகள் மற்றும் ஹோஸ்ட் நிறுவனமாக விண்ணப்பிக்கும் முறை

வணிகமயமாக்கலுக்குத் தயாராக இருக்கும் புதுமையான யோசனைகளைக் கொண்ட எந்தவொரு தனிநபரும் அல்லது MSMEயும் நிதி ஆதரவைப் பெற, இதன் ஹோஸ்ட் நிறுவனத்திடம் அதாவது IITகள், NIT, தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றிடம் விண்ணப்பிக்கலாம். ஹோஸ்ட் நிறுவனங்கள் எவையென்று தெரிந்து கொள்ள இந்த இணையமுகவரியை கிளிக் செய்யவும் http://www.dcmsme.gov.in/schemes/Institutions_Detail.pdf .

எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் (EoI இல் கொடுக்கப்பட்டுள்ளபடி) ஹோஸ்ட் நிறுவனமாக இருக்க விரும்பினால் அவர்கள் தங்கள் விண்ணப்பத்தை “மேம்பாட்டு ஆணையர்-MSME அல்லது அவர்களின் அருகிலுள்ள MSME-DI அலுவலகத்திற்கு நிதியுதவிக்காக விண்ணப்பிக்கலாம்.

மானியத்தின் அளவு அல்லது சதவீதம்:

‘பிசினஸ் இன்குபேட்டர்ஸ் (BI)’ அமைப்பதற்கான நிதியுதவி: ஒவ்வொரு BIக்கும் ரூ. 62.5 லட்சம் என்ற ஒட்டுமொத்த உச்சவரம்புக்கு உட்பட்டு, ஒவ்வொரு இன்குபேட்/ஐடியாவிற்கும் ரூ.4 முதல் 8 லட்சம் வரை செலவாகும்.

அ) உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் ரூ 2.50 லட்சம்
b) நோக்குநிலை/பயிற்சி ரூ 1.28 லட்சம்
c) நிர்வாக செலவுகள் ரூ 0.22 லட்சம்

ஒரு BI க்கு மொத்த உதவி 66.50 லட்சம். மேற்கூறிய விபரங்கள் ஸ்டார்ட் அப் அல்லது MSME நிறுவனங்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம்