நம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதான SBI வாடிக்கையாளர்கள் பணத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

ஒவ்வொரு ரூ.10000-க்கும் OTP உள்ளீடு

அதாவது ரூ.10000-க்கும் மேல் தம் வங்கி கணக்கிலிருந்து ATM-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டால் தான் அவரால் பணம் எடுக்க முடியும். இதனால் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து அத்துமீறி வேறு நபர் பணம் எடுப்பதை தடுக்க முடியும்.

இந்த முறை ஒரு முறை மட்டுமல்ல அவர் ஒவ்வொரு முறை ரூ.10000க்கும் மேல் பணம் எடுக்கும்போதும் இதே முறை நடைமுறைபடுத்தப்படும். SBI வாடிக்கையாளர் தனது டெபிட் கார்டு MPIN-ஐ வங்கியுடன் இணைப்பில் உள்ள மொபைல் எண்ணுடன் பதிவிட்ட பிறகே அவருக்கு OTP செல்லும்.

SBI – அதிக பாதுகாப்பு

அதிக கட்டணம், அபராதம் விதிப்பது போன்று SBI அவ்வப்போது பல விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் SBI வங்கி சேவையிலும் வாடிக்கையாளர்கள் பணத்துக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் தீவிர கவனம் கொண்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நபரின் கணக்கு எண், டெபிட் கார்டு எண் போன்றவற்றை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு நபர் தவறான முறையில் பணம் எடுக்க முடியாது. ATM திருட்டுகள் இதன் மூலம் தடுக்கப்படும். இந்த OTP எண் உள்ளீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் ATM செல்லும்போது இனிமேல் வாடிக்கையாளர் மொபைல் ஃபோனை கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த மாற்றம் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.