SBI வங்கியில் தங்கள் செல்போன் எண்னை இணைக்காதவர்கள் அனைவரும் விரைந்து இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SBI வங்கி:

SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி ATM-ல் பணம் எடுக்க OTP கட்டாயம் என SBI வங்கி அறிவித்து உள்ளது.

SBI வங்கியில் ATM மோசடியைத் தடுக்க OTP அம்சம் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் ATM-ல் பணம் எடுக்கும் போது, SBI வங்கியோடு இணைக்கப்பட்டுள்ள போன் எண்ணிற்கு OTP (ONE TIME PASSWORD) வரும். இந்த OTP-யை ATM-ல் பதிவு செய்தால் தான் இனி பணம் எடுக்க முடியும்.

இந்நிலையில், இந்த புதிய OTP அம்சம் நம் நாட்டின் அனைத்து SBI ATM மையத்திலும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதில், முதல்கட்டமாக பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே OTP வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி SBI வங்கியின் வாடிக்கையாளர்ளகள் அனைவரும் இனி ATM மையத்திற்கு பணம் எடுக்க செல்கின்ற போது, தங்களின் மொபைல் போனையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளார்கள்.

SBI வங்கியோடு செல்போன் எண்னை இணைக்காதவர்கள் அனைவரும் விரைந்து இணைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Author – Gurusanjeev Sivakumar