பிரதான் மந்திரி கரீப் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் இலவசமாக உணவுதானியன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி வழக்கமாக NFSA திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்களுடன் சேர்த்து கோவிட்டின் போது கூடுதலாக 5 கிலோ அளவுள்ள உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம் PMGKAY என்று பெயரிடப்பட்டது.

பலமுறை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு இம்மாதம் 30ம் தேதியோடு முடிவுற இருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மந்திரி சபை கூட்டத்தில் இத்திட்டத்தை மார்ச் 2022 வரையிலும் நீட்டிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 80 கோடி இந்திய மக்கள் பயனடைவர் என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அரசு கருவூலத்தில் இருந்து கூடுதலாக 5,33,44 கோடி ரூபாய் நிதி செலவு செய்யவேண்டி வரும்.