OLA S1 & S1 Pro – தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்ற முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் ஏகோபித்திய வரவேற்புடன் இதன் அறிமுக விழா ஆகஸ்டு 15-ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் விற்பனை இந்த வருடம் செப்டம்பர் 8ம்-தேதி முதலும் டெலிவரி அக்டோபர் மாதத்திலிருந்தும் துவங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் ஒரு புரட்சி என்றே இதை கூறலாம்.


வெறும் 499-ரூபாய் முன்பணம் செலுத்தி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். விற்பனையின்போது பதிவு செய்து கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற கருத்தும் நிலவிவருகிறது.


இந்த அறிமுக விழாவின் போது பேசிய இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Bhavish AggarwalOLA S1 மற்றும். S1 Pro என்று இரண்டு வகைகளை நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது” என்று கூறினார். குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் S1 -மாடலின் விலை ரூ. 99,999 எனவும் S1 Pro – மாடலின் விலை ரூ.1,29,999 /– ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 499 /-மட்டும் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம். அனைத்து வங்கிகள் மூலமும் EMI -வசதியையும் நிறுவனம் வழங்கவிருக்கிறது. முன்பதிவு செய்ய விரும்புவர் நேரடியாக நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

Neo Mint, Coral Glam, Marsh mellow, Porcelain White, Jet Black, Millennial Pink, Matt Black, Anthracite Grey, Midnight Blue, Liquid Silver என்ற அட்டகாசமான 10-வண்ணங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவிருக்கிறது.


ஹைபர் சார்ஜிங் மையங்களை இந்தியா முழுவதும் 400 நகரங்களில் 1 –லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நிறுவுவதற்கு நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆகவே சார்ஜ் செய்வதில் வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமும் இருக்காது. இந்த ஹைபர் சார்ஜிங் மையங்கள் பற்றிய விபரங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


2KW, 4KW மற்றும் 7KW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாக மூன்று மாடல்களில் கிடைக்கும். இதில் 2KW மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி மணிக்கு 45 கி.மீ. வேகத்திலும் 4KW மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் 7KW மோட்டார் பொருத்தப்பட்ட வண்டி மணிக்கு 95 கி.மீ. வேகத்திலும் செல்லும் திறன் கொண்டது. OLA– நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி இதன் ரேன்ஜ் 150 கி.மீ. ஆக உள்ளது. வாடிக்கையாளர் சார்ஜிங் மையத்தில் பேட்டரியை சார்ஜ் செய்யும்போது 2 – 1/2 மணி நேரத்தில் 100 % சார்ஜ் செய்துகொள்ளமுடியும். ஒரு பிரத்தியேக மொபைல் APP-வடிவமைக்கப்பட்டு அதன் மூலம் இந்த ஸ்கூட்டரை இணைத்துக்கொள்ள முடியும். 7” தொடுதிரைஇ 4G இணைப்பு பெறும் வசதி போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்