நாணயத்தின் இரண்டு பக்கங்களாக ஒவ்வொடு முதலீட்டிலும் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டுமே உண்டு. அதன்படி NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் வயோதிகர்கள் ஓய்வு கால பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு வரிச்சலுகையும் உண்டு. இத்திட்டத்திற்கு 80CCD (1B)ன் படி ரூ.50,000 வரையிலும், 80C-ல் ரூ.1,50,000 வரையிலும் வரிச்சலுகை கிடைக்கிறது.

யார் யாரெல்லாம் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம்?

NPS அனைத்து அரசு பணியாளர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யார் வேண்டுமாயினும் விருப்பத்தின் பேரில் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேரலாம். பனிக்காலம் முடிந்து குறிப்பிட்ட வயது தாண்டிய பிறகு வயோதிகம் எட்டும்போது இந்த ஓய்வூதியம் அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும் விதத்தில் இத்திட்டம் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் கால அளவுகள்

முதலில் லாக் இன் காலமாக 10 வருடங்கள் இருந்தது. இப்போது அது 5 வருடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் இணைந்துள்ள பயனாளி அவருடைய இருப்பு தொகை இரண்டரை லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் அதிலிருந்து 20 சதவீதத்தை மொத்த தொகையாகவும், 80 சதவீதத்தை வருடத்தொகையாகவும் எடுத்து கொள்ளலாம். அதே சமயம் அவருடைய முதலீட்டு இருப்பு இரண்டரை லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், ஒரே தொகையாகவே எடுத்துக் கொள்ளலாம்.

75 வயது வரையிலும் பங்களிப்பு அளித்த்து திட்டத்தில் தொடரலாம். அதிகபட்சம் 3 பேர் வரை நாமினிகளாக சேர்த்துக்கொள்ளலாம். நீண்டகால முதலீடு விருப்பம் உள்ளவர்களும், வயதான காலத்தில் நிதிச்சுமை இன்றி பாதுகாப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.