NIPFP அமைப்பு பற்றி

NIPFP என்பது மத்திய நிதியமைச்சகத்தின் திங்க் டேங்க் அமைப்பான தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு. இந்த அமைப்பு பொது பொருளாதாரம், வருவாய், வரி, நிதி மேலாண்மை, பொது செலவினங்கள் இன்னும் பல முக்கிய செயல்பாடுகளில் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு குறிப்பிடத்தக்க விதத்தில் செயலாற்றி வருகிறது. இதன் பல ஆய்வுகள் மத்திய மாநில அரசுகளால் ஆதரவளிக்கப்படுகிறது. வேறு சில நாடுகள் கேட்டுக்கொண்டபடி இந்நிறுவனம் இன்னும் சில நாடுகளுக்கும் இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்கிறது.

GST மறுசீரமைப்பு மாதிரி திட்டத்தை முன்வைத்த NIPFP அமைப்பு

GST வரி நடைமுறைக்கு வந்த பிறகு இது நாள் வரையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் சேவை வரியை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசின் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த சீர்திருத்தத்திற்கு மாதிரி திட்டத்தை NIPFP அமைப்பு முன்வைத்துள்ளது.

NIPFP அமைப்பு சமர்ப்பித்துள்ள சீர்திருத்த திட்டத்தின் விபரம் –

தற்போது இருக்கும் 5%, 12%, 18% & 28% ஆகிய 4 வரி திட்டபலகையும் 8%, 15% & 30% என 3-ஆக குறைக்கப்படும். இவ்வாறு குறைப்பதன் மூலம் மத்திய அரசின் வரி வருமான அளவீடு எப்படியும் பாதிப்புக்கு உள்ளாகாது. GST மறுசீர்திருத்தம் தொடர்பான இப்பணி கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் சமர்ப்பித்துள்ள மேற்படி 3 வரிப்பலகை GST கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுவிட்டால் இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இந்த மறுசீரமைப்பு நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிகிறது.

GST

தற்போது 5% வரி விதிக்கப்படும் பொருட்களுக்கு 8%-மும்,12% மற்றும் 18% இரண்டும் இணைக்கப்பட்டு 15% என்ற ஒரே பலகையின் கீழ் வரும், 28% வரிப்பலகை 30%-ஆக உயர்த்தப்படும். 18% வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு இனி 15% வரி செலுத்தினால் போதும் எனும்போது அரசுக்கு சிறிதளவு வருவாய் குறையும். அதை ஈடுகட்ட 28% வரி விதிப்பில் உள்ள பொருட்கள் அனைத்துக்கும் 2% வரி கூட்டப்பட்டு 30%-ஆக வசூல் செய்யப்படும். எப்படி இருந்தாலும் சாமானிய நடுத்தர மக்கள் இனி அதிக வரி கொடுத்தாக வேண்டி இருக்கும். அதாவது 5 சதவீதத்திற்கு 8 சதவீதமாகவும், 12 சதவீதத்திற்கு 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்படுகிறது.

GST 4 வரி பலகையை தவிர இன்னும் இருக்கும் 3 வரி அளவீடுகள்

GST-ல் 5%, 12%, 18% & 28% இது தவிர இன்னும் 3 வரி அளவீடுகள் உள்ளன. அவை 0%, 0.25% & 3%. இதில் அடிப்படைத் தேவை பிரிவின் கீழ் இருக்கும் பொருட்களுக்கு 0% வரி விதிக்கப்படும். வைரத்திற்கு சிறப்பு வரி 0.25% மற்றும் ரத்தினம் & நகை மீது விதிக்கப்படும் வரி 3% என்றும் உள்ளது. இவையெல்லாம் high-value low volume goods என்ற அடிப்படையில் அந்த வரிப்பலகை எதுவும் மாற்றமில்லாமல் அப்படியே தொடர்கிறது என்கிறது NIPFP.

பிற கூற்றுகள்

வருவாயை கூட்டுவதற்கு சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் இந்த GST மறுசீரமைப்பு என்று கூறுகிறார் முகர்ஜீ. மேலும் இவர் குறிப்பிடுகையில் புதிய வரி கட்டமைக்க ஒரு ஒழுங்கு முறை மாற்றம் அவசியமாகவே இருந்தது. இதனால் வரியோடு தொடர்புடைய விலை குறையவும், நிர்வாகம் மற்றும் பொருளாதார மாற்றம் உருவாகும். ஜூலை 2017-ல் விதிக்கப்பட்ட GST வரி சென்ற வருடம் மீட்டமைக்கப்பட்டிருந்தால், 2020-21-ல் அரசுக்கு GST வருவாய் கூடுதலாக ரூ.1.25 லட்சம் கோடி வசூலாகியிருக்கும் என்று NIPFP கணக்கிட்டுள்ளது.