• India
```

ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம்!!

Today Gold Rate In Tamil

By Dhiviyaraj

Published on:  2025-01-30 16:50:34  |    311

நடுத்தர மக்களின் முதலீட்டிலும், சேமிப்பிலும் முக்கியமான ஒரு பகுதியை தங்கம் நிரப்புகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்வைப் சந்தித்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றமும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக விளங்குகிறது.

தங்கம் எப்போதும் மக்கள் செல்வமாகக் கருதப்படும் ஒரு முதலீடாக இருந்து வருகிறது. சில நாட்களாக விலை ஏற்றத்தாழ்வாக இருந்த நிலையில், இன்று (ஜனவரி 30) தங்கம் மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹60,880 ஆகவும், கிராமுக்கு ₹15 அதிகரித்து ₹7,610 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிராம் வெள்ளி ₹2 அதிகரித்து ₹106-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹1,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.