NBFC – Non Banking Financial Company எனப்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாக இணைக்கப்பட வேண்டுமாயின் அவை மத்திய அரசுடன் NDH-4 படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என்பது கம்பனிகள் சட்டம் 2013-ன் 406வது பிரிவு மற்றும் திருத்தப்பட்ட நிதி விதிமுறைகள் 2014ன் கீழ் வருகிறது.

அவ்வாறு விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்கள் முறையாக கம்பெனிகள் சட்டத்தின் படி ஆய்வு செய்யப்பட்டு தேவைப்படும் அளவுகோல்களை அந்நிறுவனங்கள் நிறைவேற்றுகின்றனவா என்று உறுதி செய்த பின்னரே அவை நிதி நிறுவனங்களாக அறிவிக்கப்படும். பல்வேறு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தம்மை நிதி நிறுவனங்களாக அறிவிப்பதற்கு விண்ணப்பித்திருந்தன. அவை அனைத்தும் கடந்த 24-ம் தேதி வரை ஆய்வில் உட்படுத்தப்பட்டன.

அதன்படி இதுவரை ஆய்வு செய்த 348 நிறுவனங்களில் ஒன்று கூட அளவுகோல்களை நிறைவேற்றவில்லை என்றும் ஆகவே அந்நிறுவனங்களை நிதி நிறுவனங்களாக அறிவிப்பது இயலாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் பல நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாகச் செயல்பட்டாலும், அவை மத்திய அரசிடம் விண்ணப்பிக்கவில்லை.

இது கம்பெனிகள் சட்டம் மற்றும் நிதி விதிமுறைகளுக்கு எதிரானது.ஆகவே குறிப்பிட்ட அந்நிறுவனங்கள் முறையான வங்கிசாரா நிதி நிறுவனங்களாக உள்ள நிறுவனங்களின் முன்மாதிரிகளை ஆராய்ந்து, உறுப்பினராகி, தங்கள் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டன