LIC நம் நாட்டின் மிகப்பெரிய பிரபலமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம். LIC புதிய பங்குகளை விரைவில் வெளியிட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் LIC பாலிசிதாரர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பையும் LIC வழங்கியுள்ளது.

10% வரை போட்டி அடிப்படையில் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புண்டு

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே அவர்கள் கூறும்போது, “LIC-ல் பாலிசி வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பங்குகள் 10% வரை போட்டி அடிப்படையில் சில தள்ளுபடியில் வழங்கப்படலாம்.

LIC வெளியிட இருக்கும் இந்த ஆரம்ப பொது வழங்கலில் (IPO) அதன் பாலிசிதாரர்கள் சில தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது. காரணம் இந்த வாரம் வரைவு சிவப்பு ஹெர்ரிங் பிராஸ்பெக்ட்ஸ் (DRHP) அல்லது சலுகை ஆவணத்தை தாக்கல் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது.

LIC சட்டத்தின் கீழ், பாலிசிதாரர்களுக்கு என பிரத்தியேகமாக 10% வரை வெளியீட்டை போட்டி அடிப்படையில் சில தள்ளுபடியினால் வழங்க முடியும் என்கிற விதத்தில் சில விதிகளை LIC உருவாக்கியுள்ளது. ஊழியர்களுக்கு இடஒதுக்கீடும் அளிக்கப்படும்.

LIC-ல் அரசாங்கத்தின் பங்குகள் குறைந்தது 5% நீர்த்தப்படலாம், இது குறித்து விவரங்களை DRHP அறிவிக்கும், என்று பாண்டே கூறினார். நடப்பு நிதியாண்டு 2021-22ல் அரசாங்கத்தின் முதலீட்டு ரசீதுகள் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட அதிகமான எண்ணிக்கையில் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சில்லறை முதலீட்டாளர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கும் சில சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று பரவலாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அக்கருத்தை பாண்டே அவர்கள் உறுதிசெய்யவில்லை.