இந்தியாவில் பின்னலாடை உற்பத்திக்கு பிரசித்தி பெற்றது திருப்பூர் மாவட்டம். ஆண்டொன்றுக்கு பின்னலாடை ஏற்றுமதி மூலம் 26000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டித்தருகிறது திருப்பூர் மாவட்டம். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பின்னலாடையில் 60% இங்கிருந்தே உற்பத்தியாகின்றன.

நூல் விலை ஏற்றம் என்பது திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சந்திக்கும் நிரந்தர பிரச்சினை. 2020 நவம்பர் மாதம் ஒரு கிலோ நூல் 220-230 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதுவே சென்ற மாதம் வரை 100 ரூபாய் உயர்ந்து 320-330 என விற்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே கைவசம் உள்ள ஆர்டர்களிலிருந்து லாபம் எதுவும் கிடைப்பதில்லை தவிர நஷ்டத்தையே சந்திப்பதாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இந்த மாதம் அதாவது செப்டம்பரில் நூல் விலையில் மீண்டும் ஏற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் தமிழக நூற்பாலைகள் இந்த மாதம் நூல் விலையில் உயர்வு எதுவும் இல்லை என்று அறிவைத்துள்ளனர். இதனால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

தற்போதுள்ள நூல் விலை நிலவரம் ‘Combed நூல் விலை விபரம் (வரி நீங்கலாக) – 20ம் நம்பர் – 254 ரூபாய், 24ம் நம்பர் – 264 ரூபாய், 30ம் நம்பர் – 274 ரூபாய், 34ம் நம்பர் – 294 ரூபாய், 40ம் நம்பர் – 314 ரூபாய்Semi-Combed நூல் விலை விபரம் (வரி நீங்கலாக) – 20ம் நம்பர் – 244 ரூபாய், 24ம் நம்பர் – 254 ரூபாய், 30ம் நம்பர் – 264 ரூபாய், 34ம் நம்பர் – 284 ரூபாய், 40ம் நம்பர் – 304 ரூபாய் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஹொஸைரி நூல் விலையில் ஏற்றம் எதுவும் இல்லை.

அதே போல் தமிழக நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தாமல் ஒரேசீராக தொடர்வதால் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டு ஆர்டர்களை பெற முடியும். தொழிலும் லாபகரமாக நடைபெறும். படிப்படியாக இதேபோல் நுால் விலையை குறைந்து வந்தால் ஆடை உற்பத்தி துறையில் உள்ள அனைவரும் வெற்றி வாய்ப்புகளை எட்டிப்பிடிக்க முடியும் என்ற கருத்தை ITF அமைப்பு உறுப்பினரும், TEA ஒருங்கிணைப்பாளரும் பதிவு செய்துள்ளனர்.மொத்தத்தில் நூல் விலை ஏற்றத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் தற்காலிகமாக விடுதலை பெற்றுள்ளது.