HDFC வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4% இருக்கும் என்று கணித்துள்ளனர். அதுவே 2022-2023ல் 7.5% குறையும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் 2021-22 இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி 7.8%ஆக இருக்கும் என்றும் கணித்து கூறுகின்றனர்.

வேளாண்மை, காடுகள் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவற்றில் வளர்ச்சி நடப்பு நிதியாண்டு 2ம் காலாண்டில் 4% ஆகவும் தொழிற்சாலைகளில் 6.3% மற்றும் சேவைகளில் 8.6%ஆகவும் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

GVA-யின் அடிப்படையில் பார்க்கும்போது செப் 2021ல் வளர்ச்சி 7.3% என்று இருக்கலாம் என்று கணிக்கின்றனர். வரியால் வசூல் செய்யப்பட்ட அதிக வருமானம் மற்றும் கொடுக்கப்பட்ட மானியம் ஆகிய இரண்டுமே GDP மற்றும் GVA இரண்டுக்கும் உள்ள இடைவெளியை தீர்மானிக்கிறது.

எலக்ட்ரிக் வாகன விற்பனையில் ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம் பண்டிகை காலமான அக் 1 முதல் நவ 15 வரை 24000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே சென்ற ஆண்டு முழுமைக்கும் சேர்த்து 11339 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது.

IOB மற்றும் CBI இவ்விரண்டு வங்கிகளையும் தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து இந்நிறுவன பங்குகளின் விலையும் பங்கு சந்தையில் விலை அதிகரித்துள்ளன.

உணவு பொருட்களான சர்க்கரை, எண்ணெய், கோதுமை ஆகியவற்றின் விலையம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து பார்லி பிரட், பிஸ்கட் போன்றவற்றின் விளையும் உயர்ந்துள்ளது. பார்லே புராடக்ட்ஸ் பிஸ்கட்களின் விலையை 5-10% வரை உயர்த்தி உள்ளது.

இந்தியா அமெரிக்காவுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்வதை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் கூடிய விரைவில் அமெரிக்காவுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நம் நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஏஜென்சிகளின் சோதனை சான்றிதழ்கள் இனி அமெரிக்க அரசால் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிகிறது.