ரிலையன்ஸ் ரீடெயில் விரைவு வர்த்தக நிறுவனமான Dunzo-வில் 240 மில்லியன் டாலர் நிதியுதவியை ஈட்டியுள்ளதாக கூறியுள்ளது, மேலும் பெங்களூரை சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இனி 25.8% பங்குகளை தன வசம் வைத்திருக்கும்.

இரு நிறுவனங்களின் இணைவு பற்றி டன்சோவின் கருத்து

Dunzo இன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான கபீர் பிஸ்வாஸ் கூறுகையில், நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளருடன் கூட்டு சேர்ந்தது, போட்டியாளர்களுக்கு எதிராக ஒரு பெரிய உயர்வை தரும் என்று நம்புவதாகவும், இரு நிறுவனங்களும் விற்பனை சங்கிலியில் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Quick Commerce தளத்தில் விரைவில் டாடாவின் பிக்பாஸ்கெட்-ஐ எதிர்பார்க்கலாம்

அசுர வேகத்தில் விரிவடைந்து வரும் விரைவு வர்த்தக தளத்தில் ஏற்கனவே கணிசமான முதலீடுகள் Blinkit, Zepto மற்றும் Swiggy-ன் இன்ஸ்டாமார்ட் போன்ற ஸ்டார்ட்அப்களில் குவிந்து வரும் நேரத்தில், இப்போது ரிலையன்ஸின் நுழைவும் வந்துள்ளது. கூடிய விரைவில் டாடாவின் “பிக்பாஸ்கெட்” தனது 15-30 நிமிட டெலிவரி சேவையை தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ்-டன்சோ ஒப்பந்தம் பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் மதிப்பீட்டை சுமார் 300 மில்லியன் டாலரில் இருந்து 775 மில்லியன் டாலராக இருமடங்கு உயர்த்தியுள்ளது.