தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ் மற்றும் ஜியோவின் வருகைக்கு பிறகு அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL நாளுக்கு நாள் சரிவையே சந்தித்து வருகின்றது. போட்டி தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் இன்று 5G அலைக்கற்றைக்கு முன்னேறியுள்ள நிலையில் BSNL இன்னமும் முன்னேற்றம் காண முடியவில்லை.

இதனை மேம்படுத்தும் முயற்சியில் MTNL, BSNL உள்ளிட்ட இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டன. பிறகு தன்னார்வ ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர். இவ்வாறு பல திட்டங்கள் செயல்படுத்தியபோதும் இன்று நாள் வரையில் இந்நிறுவனங்கள் ஏற்றம் பெற முடியவில்லை.

இந்நிலையில் தான் DIPAM ஆவணங்களின் படி MTNL, BSNL நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 970 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சொத்துகளும் பட்டியிலிடப்பட்டுள்ளன. இதில் ஹைதராபாத், சண்டிகர், பாவ்நகர், கொல்கத்தா ஆகிய இடங்களில் BSNL-க்கு சொந்தமாக உள்ள சொத்துகள் இருப்பு விலையாக 660 கோடி ரூபாய் மதிப்புக்கு விற்பனைக்கு உள்ளது. MTNLக்கு சொந்தமான சொத்துக்கள் விற்பனைக்கு மின்னணு ஏலம் டிசம்பர் 14ம் தேதி நடத்தப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.