மாஸ்க் இல்லாமல் இப்போதெல்லாம் எங்கும் வெளியில் சொல்ல முடியாது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாராக இருந்தாலும், சுவாச நோய் இருந்தாலும் கூட அவர்களும் மாஸ்க் உடன்தான் வெளியில் செல்லவேண்டியது கட்டாயம். அதுவே நமக்கும், பிறருக்கும் பாதுகாப்பு.

எல்லாம் சரிதாங்க. ஆனால் தொடர்ந்து அதிக நேரம் மாஸ்க் அணிந்திருப்பதால் கன்னம், காதுகளின் பின்புறம் எல்லாம் வலிக்கிறது. சரியாக மூச்சு விட முடியாமல் சிரமப்பட வேண்டி இருக்கிறது என்பது போன்ற பல சிரமங்கள் இருக்கிறது தான். பலரது இந்த கஷ்டத்திற்கு விடையாக சந்தையில் தற்போது வெளிவந்திருக்கும் புதிய அறிமுகம் தான் பிலிப்ஸ் ஃப்ரெஷ் ஏர் மாஸ்க். “Breath Easy, Philips Fresh Air Mask / Say goodbye to Stuffy Masks” என்ற அலங்கார மேற்கோள்களோடு அமேசான் பக்கத்தை அலங்கரிக்கின்றன இதன் விளம்பரம்.

ஒரு புதுமையான ஃபேன் மாட்யூலை இந்த மாஸ்க் வழங்குகிறது, இது ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் CO2 அளவைக் குறைக்கும் நோக்கத்துடன் சிறந்த சுவாச வசதியை வழங்குகிறது. 4-அடுக்கு அல்லாத வால்வு வடிகட்டி வடிவமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும், பிலிப்ஸின் இந்த ஃப்ரெஷ் ஏர் மாஸ்க், நீண்டகாலமாக மாஸ்க் பயன்படுத்துவதால் ஏற்படும் சிரமங்களை குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் ஃப்ரெஷ் ஏர் மாஸ்கின் சிறப்பம்சங்கள்

4 நிலை வடிகட்டுதலுடன் கூடிய உங்கள் தனிப்பட்ட காற்று சுத்தப்படுத்தி. முதல் முறை பயன்படுத்தும்போது 3 மைக்ரான்கள் வரை 95% தீங்கு விளைவிக்கும் காற்றில் உள்ள மாசுக்கள் மற்றும் ஒவ்வாமைகளை நீக்குகிறது. உகந்த சுவாச வசதிக்கான ஏர் பவர் தொழில்நுட்பம். 3 வேக அமைப்புகளுடன் ரிச்சார்ஜபிள் ஃபேன் தொகுதி.

வடிகட்டியை மாற்றுவது எளிது. தகுந்த இடைவெளியில் பயன்படுத்தும்போது நன்கு வடிகட்டுதல் மற்றும் சுகாதாரத்தை பேணுகிறது. ​​ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் வடிகட்டியை மாற்றும்படி பரிந்துரைக்கப்படுகிறது. பிலிப்ஸ் ஆய்வகத்தால் வரையறுக்கப்பட்ட “கோல்டன் ஆங்கர் பாயிண்ட்” மூலம் மாஸ்க் அணியும்போது மூக்கு, கன்னங்கள் மற்றும் காதுகளில் ஏற்படும் அழுத்தங்களை இல்லாமல் செய்கிறது

அட்ஜஸ்டபிள் எலாஸ்டிக் அதன் கனத்தை உணரவிடாமல் அணிவதற்கு எளிதான நிலையை உருவாக்குகிறது. கடினமான நேரங்களில் நம்மால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து விடுபட முடியாது. ஆனால் தகுந்த வசதிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். புதிய முயற்சிகளையும், மாற்றங்களையும் வரவேற்போம். மொத்தத்தில் பாதுகாப்பாக இருப்போம்.