RBI மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக டிஜிட்டல் வாயிலாக செய்யப்படும் பணப் பரிவா்த்தனையானது கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக RBI வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலமாக தெரிய வந்துள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை:

இது தொடர்பாக RBI வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியுள்ளதாவது, பொருளாதார நடவடிக்கையில் ரொக்கத்தின் பயன்பாட்டை குறைத்து டிஜிட்டல் வாயிலான பணப் பரிவத்தனைக்கு மாற RBI ஒருங்கிணைந்த முறையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

இதற்கு, கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டு வரையிலான 5 ஆண்டில் நல்ல பலன் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-2016 ஆண்டு முதல் 2019-2020 நிதி ஆண்டின் இடையேயான காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனையினுடைய கூட்டு ஆண்டு வளா்ச்சியின் விகிதம் 55.1% எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு மாா்ச் மாதத்தில் 593.61 கோடியாக இருந்த டிஜிட்டல் முறையான பணப் பரிவா்த்தனையானது 2020 ஆண்டு மாா்ச் மாதத்தில் 3,434.56 கோடியைத் எட்டியுள்ளது.

இதன் மதிப்பின் அடிப்படையில் இது 920.38 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 1,623.05 லட்சம் கோடி ரூபாயாக உயா்ந்து உள்ளதாக RBI வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar