EMI செலுத்துவதற்காக 2 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை நீட்டிக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

தற்போது பொருளாதாரம் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வேலை இல்லாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும், பிற தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வங்கியில் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் மிகவும் அவதியுற்று வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தடை செய்யப்பட்டிருந்த நிபந்தனைகள் அனைத்தும், மேலும் நீட்டிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளார்கள். வட்டி விகிதமும் குறைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகவும் கூறப்பட்டது.

2 ஆண்டுகள் அவகாசம்:

இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் இது தொடர்பான விளக்கங்கள் உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இஎம்ஐ செலுத்த 2 ஆண்டுகள் வரையில் அவகாசம் நீட்டிப்பு செய்ய முடியும் என மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளன.

வட்டி வசூலிப்பது குறித்து வரும் விசாரணையில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மக்கள் ஏற்கனவே வாங்கிய கடன் வட்டிக்கு, மீண்டும் வட்டி வசூலிக்க இருப்பதாக வங்கிககள் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 ஆண்டு வரை கால அவகாசம் கொடுக்க முடியும் என மத்திய அரசு கூறியிருப்பது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar