AIS பற்றிய பொது விவரங்கள்

வருமான வரி செலுத்திடுபவர் தம்மை பற்றி வரித்துறை என்னென்ன தகவல்களை தெரிந்து வைத்துள்ளது என்பது பற்றி அறிந்து கொள்ள உதவும் கருவியே AIS-Annual Information Statement எனப்படும் ஆண்டு தகவல் அறிக்கை முறை. வருமான வரி செலுத்தும் நபர் ஒரு நிதியாண்டில் என்னென்ன பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளார் என்பது பற்றி அனைத்து விரிவான அறிக்கைகளும் கொண்டதாக இருக்கும் இந்த AIS.

ஒரு நிதியாண்டு முழுவதும் அவர் சம்பளம், ஈவுத்தொகை, சேமிப்பின் வாயிலாக கிடைத்த வட்டி, தொடர் வைப்பு, விற்ற, வாங்கிய பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் பண்டு போன்ற அனைத்தின் மூலமும் ஈட்டிய வருமானம் பற்றிய அணைத்து தகவல்களும் இந்த AIS-ல் இருக்கும். மேலும் TDS, TCS மற்றும் பிற வரி கோரியது மற்றும் திரும்ப பெற்ற தொகை ஆகிய விவரங்களும் இதில் அடங்கும்.

AIS தரவிறக்கம் செய்வது எப்படி

வருமான வரி துறை இணையதளத்தில் www.incometax.gov.in இந்த AIS படிவத்தை 5 எளிய படிகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்குரிய விபரங்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://economictimes.indiatimes.com/wealth/tax/what-is-ais-and-how-to-download-it-from-new-income-tax-portal/articleshow/87732363.cms

AIS படிவத்தில் உள்ள பகுதிகள் எத்தனை

AIS படிவம் A & B என இரண்டு பகுதிகளை கொண்டது. பகுதி A -ல் வரி செலுத்துபவர் பற்றிய பொதுவான விவரங்கள் – PAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி போன்ற இன்னும் பிற பொது விவரங்கள் இடம் பெற்றிருக்கும். பகுதி B-ல் TDS, TCS, நிதி பரிவர்த்தனைகள், வரி கட்டணம், கோரிய மற்றும் திரும்ப கிடைக்கும் வரி போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

AIS முறையை அறிமுகம் செய்ததற்கான நோக்கம்

ஒரு நபரின் வருமான வரி செயல்பாடுகள் அனைத்தும் எந்த மறைமுகமும் இன்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வரி தாக்குதல் செய்வதை எளிமையாக்கவும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

AIS-ல் திருத்தங்கள் செய்வது பற்றிய பத்திரிகை அறிவிப்பு

வருமான வரி துறை நவம்பர் 1, 2021 அன்று வெளியிட்டிருந்த பத்திரிக்கை செய்தியில் வரி செலுத்துபவர் அனைவரும் AIS- இடம் பெற்றிருக்கும் விவரங்களை சரி பார்க்கும்படி கூறியிருந்தது. ஏதேனும் தகவல்கள் சரியில்லை எனில் அதை உடனே வருமான வரி துறையிடம் தெரிவிக்கும்படி கேட்டிருந்தது. வருமான வரி செலுத்தும் நபர் அவ்வாறு எதையும் கூறாத பட்சத்தில் பதியப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சரியானவை தான் என்று கொள்ளப்படும். பிறகு அந்நபர் வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்கும் போது அதில் பதியப்பட்டுள்ள தகவல்களில் உள்ள வேறுபாடுகளுக்கு வருமான வரி துறையிடம் விளக்கம் அளிக்க வேண்டி வரும். AIS-ல் இருக்கும் பெயர், வருடம் போன்றவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் அவர்கள் கருத்தை பதிவு செய்யும் வசதியும் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.