Participatory Notes எனப்படும் ‘பி-நோட்ஸ்’ வழி முதலீடு

Participatory Notes எனப்படும் ‘P-Notes’ வழியாக இந்திய சந்தைகளில் வெளிநாட்டு பணக்காரர்கள் செய்யும் முதலீடு கடந்த 43 மாதங்களில் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. எவ்வளவு தெரியுமா? கடந்த அக்டோபர் மாத இறுதியில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய (SEBI) தரவுகளின்படி ‘பி-நோட்ஸ்’ முதலீடுகளின் மதிப்பு இந்திய சந்தையில் – பங்குகள், கடன் மற்றும் ஹைபிரிட் சந்தைகளில் ரூ.1,02,553 கோடிகள் என தெரிகிறது.

அது என்ன ‘பி-நோட்ஸ்’

ஒரு பதிவு செய்யப்பட்ட அந்நிய முதலீட்டு நிறுவனத்தின் பெயரில் High-net-worth individual ஆகிய வெளிநாடுகளில் இருக்கும் பெரும்பணக்காரர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்யலாம். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் முறையே இந்த Participatory Notes எனப்படும் ‘பி-நோட்ஸ்’

இவ்வகை முதலீடுகளை ஊக்குவிப்பதால் இந்திய சந்தைக்கு மிகப்பெரிய அளவில் முதலீடுகள் கிடைக்கும். பன்னாட்டு முதலீட்டாளர்களும் நம் இந்திய சந்தையில் தங்கள் முதலீடுகளை செய்து வந்தனர். மத்திய அரசு பி-நோட்ஸ் மீது வரி விதித்ததில் ஏற்பட்ட சிக்கல்களுக்கு பின் இந்த முதலீடு கொஞ்சம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் இது மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரை Participatory Notes முதலீடுகள்

ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாத இறுதியிலும் செய்யப்பட்டுள்ள பி-நோட்ஸ் முதலீடுகள் விபரம் வருமாறு – ஏப்ரல் மாத இறுதியில் ரூ.88447 கோடி, மே-ல் ரூ.89743 கோடி, ஜூன்-ல் ரூ.92261 கோடி, ஜூலை-ல் ரூ.85799 கோடி, ஆகஸ்ட்-ல் ரூ.97744 கோடி, செப்டம்பர்-ல் ரூ.97751 அதுவே அக்டோபர்-ல் ரூ.1,02,553. பங்குகளில் ரூ.93,213 கோடி, கடன்கள் மீது ரூ.8,885 கோடி, ஹைபிரிட் செக்யுரிட்டிஸ் மீது ரூ.455 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.