INDCOSERVE அமைப்பு மற்றும் நோக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு கூட்டமைப்பு Indcoserve சுமார் 30000 சிறு தேயிலை விவசாயிகளுடன் இணைந்து பணிபுரிகிறது. இங்கு ஆண்டொன்றுக்கு சுமார் 13 மில்லியன் கருப்பு தேயிலையை உற்பத்தி செய்யப்படுகிறது. 16க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளிலிருந்து பச்சை தேயிலைகளை பெற்று, ப்ராசஸிங் செய்து, விநியோகம் மற்றும் வர்த்தகம் செய்யும் நடவடிக்கைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நம் நாட்டில் மிக வேகமாக பரவிவரும் ‘மீல்ஸ் ஆன் வீல்’ கலாச்சார முறையை வரும் ஆண்டுகளில் மிகப்பிரகாசமான வருவாயை ஏற்படுத்தி கொடுக்கும் என்று நம்பப்படுவதால் Indcoserve சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (SADP) ஆதரவுடன் 5 தேயிலை-உணவு டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மொத்த திட்டச் செலவு ரூ. 75 லட்சம்.

சுகாதாரம் மற்றும் தூய்மையை பேணும் Indco Tea Vandis – இண்ட்கோ டீ வண்டிகள்

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ‘Indco Tea Vandis’, Indcoserve இன் பல தேயிலை வகைகளையும் சிறிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளையும் சிக்கனமான விலையில் வழங்குகிறது, அதே நேரத்தில் சுகாதாரம் மற்றும் தூய்மைக்கான உயர் தரத்தைப் பேணுகிறது. மொபைல் வேன்கள் மூலம் விற்கப்படும் தேநீர் மற்றும் உணவு வணிகம் நிச்சயமாக தனக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கிக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் உறுதியுடன் இருக்கின்றனர்.

நடமாடும் தேநீர் கடைகள் துவக்க விழா

இந்நிலையில் 20 நடமாடும் தேநீர் கடைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் டிசம்பர் 15 அன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மூலம் இந்த தேநீர் கடைகள் செயல்படும் எனக் கூறப்படுகிறது. தமிழக அரசு சார்பில் 15 லட்சம் மதிப்பிலான வண்டிகளை 2 லட்சம் டெபாசிட் செலுத்தி மழைவாழ் மக்கள் கடைகளை நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தேயிலை தோட்டங்களையும் அத்தொழிலையும் நம்பியுள்ள பல மலைவாழ் மக்கள் பயனடைவர் மேலும் அவர்களின் வாழ்வாதாரம் உயரும் வாய்ப்பும் உள்ளது.

சென்னை மாநகரில் 10 கடைகளும், திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா 3 கடைகளும், கோயம்புத்தூரில் 4 கடைகளும் தொடக்கத்தில் செயல்படும். பொதுமக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பொறுத்து கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் துவக்க விழா நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் 20 நடமாடும் தேநீர் கடைகளை கொடியசைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். உடன் சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக செயலாளர் சுப்ரியா சுலே, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.