நடப்பு காரீப் சந்தை காலகட்டத்தில் நெல் முதலியவற்றை விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச விலைக்கு கொள்முதல் செய்து கொண்டு வருகிறது அரசு.

மேலும், தமிழகம், கேரளம், பஞ்சாப், ஹரியானா, உ.பி, உத்தரகாண்ட், குஜராத், சண்டிகர் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நெல் கொள்முதல் செய்வதில் நல்ல முன்னேற்றமானது ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கடந்த 24-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 144.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் ஆனது கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் இதே சமயத்தில் 117.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் ஆனது கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் நெல் கொள்முதல் ஆனது 23 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த ஆண்டு மொத்த கொள்முதலில், பஞ்சாப்பில் மட்டும் 144.59 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

நடப்பு காரீப் சந்தை காலகட்டத்தில் 12.41 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை ஆக, ஒரு மெட்ரிக் டன்னுக்கு 18,880 ரூபாய் வீதம் 27298.77 கோடி ரூபாயை பெற்றுள்ளனர்.

மேலும், மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உ.பி, குஜராத், ஹரியாணா, ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் இருந்து 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar